May 30, 2025 - 12:18 PM -
0
இலங்கையின் முன்னணி பொதுக் காப்புறுதி நிறுவனமான HNB பொதுக் காப்புறுதி (HNBGI), LMD நிறுவனத்தின் 2024 ஆம் ஆண்டுக்கான Most Awarded Companies in Sri Lanka பட்டியலில் இலங்கையின் மிக அதிகமாக விருதுகள் பெற்ற பொது காப்புறுதி நிறுவனம் என அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரம், காப்புறுதித் துறையில் நிறுவனத்தின் முன்னணி நிலையை மேலும் வலுப்படுத்தும் வகையில், அதன் விசேடத்துவம், புத்தாக்கம் மற்றும் வாடிக்கையாளர் மையத்துவ சேவைக்கு வழங்கப்படும் முக்கிய அங்கீகாரம் ஆகும்.
அதனுடன் இணைந்ததாக, HNBGI நிறுவனத்திற்கு சமீபத்தில் Fitch Ratings நிறுவனம் ‘A-(lka)’ இலிருந்து ‘A(lka)’ என அதிநிறைவு கடன் மதிப்பீட்டு மேம்பாட்டையும் வழங்கியுள்ளது. இது நிறுவனத்தின் வலிமையான நிதி நிலையை பிரதிபலிக்கின்றது. கடுமையான பொருளாதார சூழ்நிலைகளிலும் உயர் செயல்திறனை காண்பிக்கும் நிறுவனத்தின் திறனை இந்த மதிப்பீடு உறுதிப்படுத்துகிறது. நிறுவனத்தின் நீடித்த வளர்ச்சி மற்றும் சேவை நிலைத்தன்மையை இது உறுதிப்படுத்துகிறது. HNBGI ஈடுகொடுக்கும் திறன் கொண்டது மட்டுமல்லாமல் நிலைபேறான நீண்டகால வளர்ச்சிக்கும் நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்பதை இது உறுதிப்படுத்துகிறது. அதன் மதிப்பீட்டில் இந்த மேல்நோக்கிய முன்னேற்றமானது நிறுவனத்தின் நற்பெயரை மேலும் வலுப்படுத்துவதோடு, நம்பகமான, உயர்தர காப்புறுதி தீர்வுகளுடன் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் திறனையும் மேம்படுத்துகிறது.
இது குறித்து HNBGI நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியான சித்துமின ஜயசுந்தர குறிப்பிடுகையில், “2024 ஆம் ஆண்டுக்கான இலங்கையின் பல விருதுகள் பெற்ற பொதுக் காப்புறுதி நிறுவனமாக தெரிவு செய்யப்பட்டமையானது எமக்குப் பெருமையாக உள்ளது. எமது வாடிக்கையாளர்களின் நம்பிக்கையும், எமது குழுவின் உழைப்பும் இந்த வெற்றிக்குக் காரணமாகும். HNBGI நிறுவனம் ஆகிய நாம், புத்தாக்கம் மற்றும் சிறந்த சேவை தரத்துக்கு முழுமையாக அர்ப்பணிக்கபட்டுள்ளோம். நாளைய பிரச்சினைகளை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வாடிக்கையாளர்களைச் சாதனையாளர்களாக மாற்றுவதே எமது குறிக்கோளாகும்.” என்றார்.
வாகனம், மருத்துவம், வீடு, தீ, கடல், பயணம், பொறியியல் காப்புறுதி உள்ளிட்ட பரந்த அளவிலான காப்புறுதி தயாரிப்புகளுக்கு மேலதிகமாக, HNBGI நிறுவனம் தனது தொழில்துறையில் முதன்முதலான புத்தாக்கமான பல தீர்வுகளையும் வழங்கி வருகிறது. குறிப்பாக, விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பாளர்களுக்காக உருவாக்கப்பட்ட பராமெட்ரிக் காப்புறுதி திட்டம் மூலம் அவசர நேரங்களில் விரைந்து உதவ முடிவதுடன், நாட்டின் உணவு பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில் ஒரு முன்னோடி முயற்சியாக திகழ்கிறது. HNBGI இன் புத்தாக்கம் மீதான கவனம், நிறுவனம் தனது வாடிக்கையாளர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு மாத்திரமல்லாமல், நிலைபேறான வளர்ச்சியை ஆதரிக்கும் தொலைநோக்கு சிந்தனை தீர்வுகளையும் அவர்களுக்கு வழங்குகிறது என்பதை உறுதி செய்கிறது.
2027 ஆம் ஆண்டுக்குள் இலங்கையின் மிக முன்னணி வாடிக்கையாளர் மையத்துவம் கொண்ட பொதுக் காப்புறுதி நிறுவனமாக மாறுவதற்கான தெளிவான நோக்கத்துடன், HNBGI நிறுவனம் புத்தாக்கம், நிதி நிலைபேறான தன்மை மற்றும் சேவை விசேடத்துவம் மூலம் தன்னுடைய சந்தை நிலையை உறுதிப்படுத்தி வருகிறது. இந்த அங்கீகாரங்கள் மற்றும் வளர்ச்சியை நோக்கி எடுக்கப்படும் மேம்பாடுகளும், அதன் வாடிக்கையாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான நிறுவனத்தின் உறுதியை வலுப்படுத்துவதோடு, இது எதிர்கால ஆண்டுகளில் நிலையான வெற்றிகளுக்கு வழி வகுக்கும்.