செய்திகள்
யோஷித மற்றும் டேஸிக்கு எதிரான வழக்கு தொடர்பில் கோரிக்கை

May 30, 2025 - 01:41 PM -

0

யோஷித மற்றும் டேஸிக்கு எதிரான வழக்கு தொடர்பில் கோரிக்கை

யோஷித ராஜபக்ஷ மற்றும் அவரது பாட்டி டேஸி பொரஸ்ட் ஆகியோருக்கு எதிராக பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை ஜூலை 11 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இந்த வழக்கு இன்று (30) மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது, ​​பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெந்திஸ், நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்து, இந்த விசாரணையை எதிர்கொள்ளத் தேவையான ஆவணங்களின் பட்டியலை வழங்குமாறு கோரினார். 

நியாயமான விசாரணையை எதிர்கொள்ள அந்த ஆவணங்கள் தேவை என்று ஜனாதிபதி சட்டத்தரணி நீதிமன்றத்தில் கூறியுள்ளார். 

அதன்படி, பட்டியலில் உள்ள ஆவணங்கள் மற்றும் அறிக்கைகளை பிரதிவாதிக்கு வழங்க நடவடிக்கை எடுக்குமாறு அரசு தரப்பு சார்பில் ஆஜரான சிரேஷ்ட அரசு சட்டத்தரணிக்கு நீதிபதி அறிவித்ததாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05