May 30, 2025 - 01:51 PM -
0
UPDATE: May 30, 2025 02:55 pm
பலப்பிட்டி கடற்கரைக்கு அப்பால் கடலில் தத்தளித்த மீன்பிடி கப்பலில் இருந்து மூன்று மீனவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த மீனவர்களை மீட்பதற்காக இலங்கை விமானப்படை பெல் 412 ஹெலிகொப்டரை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
……………………………………………….
May 30, 2025 02:08 pm
பலப்பிட்டி மீனவர்கள் மீட்பு பணியில் கடற்படை ஹெலிகொப்டர்
பலப்பிட்டி கடற்கரைக்கு அப்பால் கடலில் சிக்கித் தவிக்கும் மீன்பிடிக் கப்பலின் பணியாளர்களை மீட்பதற்காக பெல் 412 ஹெலிகொப்டர் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
பாதுகாப்புச் செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில், இலங்கை விமானப்படை குறித்த மீட்பு நடவடிக்கைகளுக்காக குறித்த ஹெலிகொப்டரை ஈடுபடுத்தியுள்ளது.

