May 30, 2025 - 05:21 PM -
0
JXG (ஜனசக்தி குழுமம்) துணை நிறுவனமான ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி, 2025 மே மாதம் 28 ஆம் திகதி ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, தனது மூலோபாய வர்த்தக நாமத்தை ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி என மாற்றம் செய்துள்ளதாக அறிவித்துள்ளது. தனது சந்தை அடையாளத்தை வலிமைப்படுத்துவது மற்றும் நீண்ட கால வளர்ச்சி இலக்குகளுடன் பொருந்தச் செய்யும் வகையில் இந்த மாற்றம் அமைந்திருப்பதாக அறிவித்துள்ளது.
வர்த்தக நாம நிலை மாற்றம் என்பது எளிமையாக பெயர் மாற்றம் என்பதற்கு அப்பால் சென்று, வாடிக்கையாளர்களுக்கு வலிமை, நிலைத்தன்மை மற்றும் வளங்களுடன் சேவைகளைப் பெற்றுக் கொடுக்கும் அடிப்படை ஆற்றலை மேம்படுத்தியுள்ளமையை பிரதிபலிப்பதாக அமைந்திருக்கும் என நிறுவனம் அறிவித்துள்ளது. மீளமைப்பினூடாக, வாடிக்கையாளர்களுக்கான அதன் கரிசனை மேலும் அதிகரித்துள்ளதுடன், நிதிசார் சவால்களை கடந்து செல்லும் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்கும் தமது அடிப்படை அர்ப்பணிப்பை மீள உறுதி செய்வதாகவும் அமைந்திருப்பதாக நிறுவனம் வெளிப்படுத்தியுள்ளது.
உறுதியான செயற்பாடுகளைக் கொண்டுள்ள JXG (ஜனசக்தி குழுமம்) இன் அங்கமாக அமைந்திருக்கும் நிலையில், மேலும் பாரிய, சிறந்த மற்றும் வலிமையான நிலைக்கு உயர உறுதிபூண்டுள்ளது. அதற்காக, நிலையான மற்றும் முன்னேற்றகரமான நிதிசார் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனத்தின் வாடிக்கையாளர்களை மையப்படுத்திய செயற்பாடுகள் மற்றும் நிதிசார் உள்ளடக்கம் போன்ற பிரதான பெறுமதிகள் பகிர்ந்து கொள்ளப்படும். இந்த மூலோபாய புத்தாக்கம், ஒரியன்ட் பைனான்ஸ் கொண்டிருந்த 43 வருட கால வாடிக்கையாளர் சேவை அனுபவத்துடன், மேம்படுத்தப்பட்ட ஏற்றுக் கொள்ளும் தன்மை மற்றும் ஜனசக்தி வர்த்தக நாமத்தின் சந்தைப் பிரசன்னம் ஆகியவற்றை ஒன்றிணைத்து வழங்குகிறது. வர்த்தக நாம மாற்றத்தினூடாக, JXG (ஜனசக்தி குழுமம்) உடன் ஒருமைப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதுடன், முதலீடுகள், காப்புறுதி மற்றும் நிதித் துறைகள் போன்றவற்றில் நிதிசார் பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனம் எனும் நிலையை மீள உறுதி செய்துள்ளது.
பிரத்தியேகமான சேவைகள் மற்றும் ஆழமான உறவுகள் போன்றவற்றினூடாக நீண்ட காலமாக நிலைத்திருக்கும் வாடிக்கையாளர் இருப்பை கட்டியெழுப்பியுள்ள நிறுவனம், ஆதரவான நிதிசார் பங்காளராக திகழும் தனது அர்ப்பணிப்பை பேணுவதுடன், ஜனசக்தி வர்த்தக நாம ஏற்றுக் கொள்ளலுடன் காணப்படும் மேம்படுத்தப்பட்ட சந்தை தோற்றப்பாட்டிலிருந்து பயனைப் பெற்றுக் கொள்ளும். ஏற்கனவே காணப்படும் வாடிக்கையாளர் உறவுகள், கணக்குகள் மற்றும் சேவைகள் எவ்விதமாற்றங்களுமன்றி தொடர்ந்தும் பேணப்படுவதனூடாக, நிறுவனத்தின் மீது நம்பிக்கையை கொண்டுள்ள வாடிக்கையாளர்களுக்கு ஒப்பற்ற அனுபவம் உறுதி செய்யப்படும்.
தொடர்ச்சியான அர்ப்பணிப்புக்கு அனுபவம் வாய்ந்த பணிப்பாளர் சபை உறுப்பினர்களின் வழிகாட்டல்கள் வழங்கப்படும். பணிப்பாளர் சபையில் ராஜேந்திர தியாகராஜா – தவிசாளர்/நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர், கே.எம்.எம். ஜபீர் – நிறைவேற்று பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி, பிரகாஷ் ஏ. ஷாப்டர் – நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர், ஸ்ரீயான் கூரே – சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர்/சிரேஷ்ட பணிப்பாளர், தர்ஷன ரத்நாயக்க – சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர், நளின் கருணாரட்ன – சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர், மனோஹரி அபேசேகர – சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர், சந்தமாலி சந்திரசேகர – சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் மற்றும் டேனியல் அல்போன்சஸ் – சுயாதீன நிறைவேற்று அதிகாரமற்ற பணிப்பாளர் ஆகியோர் அடங்கியுள்ளனர்.
ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியினால் தொடர்ந்து பரந்த நிதிச் சேவைகள் வழங்கப்படும். அதில் வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித் தீர்வுகள் (இஸ்லாமிய நிதியியல்) மற்றும் கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் போன்றன அடங்கியுள்ளன. இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்ற நிறுவனமாக திகழ்வதுடன், லங்கா ரேட்டிங் ஏஜென்ஸி (LRA) இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலையும் பெற்றுள்ளது.
உள்ளகமட்டத்தில், நிறுவனம் JXG (ஜனசக்தி குரூப்) அடையாளத்தை பேணுகிறது. குறிப்பாக, நிலையான வைப்புகள் மற்றும் கடன்கள் சந்தைப்படுத்தல் பிரிவில், வாடிக்கையாளர்கள் வர்த்தக நாமத்தின் வலிமை மற்றும் தங்கியிருக்கும் திறன் போன்றவற்றுடன் உறுதியான முறையில் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொண்ட வண்ணமுள்ளனர். முறையான மாற்றம் தற்போது வெளிப்புற வர்த்தக நாம அடையாளத்தை நிறுவப்பட்ட உள்ளக செயல்பாட்டு நடைமுறைகளுடன் சீரமைத்து, ஒருங்கிணைந்த மற்றும் ஒத்திசைவான சந்தை இருப்பை உருவாக்குகிறது.