May 31, 2025 - 09:05 PM -
0
பெய்து வரும் பலத்த மழைக்கு மத்தியில் மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தில் ஒரு வான் கதவைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அந்த நீர்த்தேக்கத்தின் நீரேந்து பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தால், நீர்த்தேக்கத்தின் ஏனைய வான் கதவுகள் சுயமாகவே திறக்கப்படும் என்று நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.
எனவே பொதுமக்கள் இது தொடர்பாக விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்து பிரிவின் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

