செய்திகள்
உலக அழகி போட்டியில் இலங்கையின் எதிர்பார்ப்பு தகர்ந்தது

May 31, 2025 - 09:27 PM -

0

உலக அழகி போட்டியில் இலங்கையின் எதிர்பார்ப்பு தகர்ந்தது

72வது உலக அழகி போட்டி தற்போது இந்தியாவில் இடம்பெற்று வருகிறது. 

இந்தியாவின் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் உள்ள ஹைடெக்ஸ் சம்மேளன மத்திய நிலையத்தில் இடம்பெறுகிறது. 

உலகெங்கிலும் உள்ள 108 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்களின் பங்கேற்புடன் அண்மையில் தொடங்கிய உலக அழகி போட்டி, கடந்த சில நாட்களாக பல்வேறு பிரிவுகளின் கீழ் நடைபெற்றது. 

போட்டியின் காலிறுதிப் போட்டியாளர்கள் இன்று அறிவிக்கப்பட்டனர். 

இதன்போது இலங்கை சார்பாகப் போட்டியிட்ட அனுதி குணசேகர, இறுதி 40 இடங்களுக்குள் நுழையும் வாய்ப்பை இழந்தார். 

அதன்படி, இலங்கையின் உலக அழகி எதிர்பார்ப்பு தகர்ந்தது. 

72வது உலக அழகி போட்டியில் அண்மையில் நடைபெற்ற போட்டிகளில் அனுதி குணசேகர சிறப்பான செயல்திறனைக் காட்ட முடிந்ததுடன், அவர் நேரடியாகவும் மற்றும் மல்டிமீடியா பிரிவுகளிலும் இறுதிச் சுற்றுகளுக்குத் தகுதி பெற முடிந்தது. 

நாட்டின் வரலாற்றில் முதல் முறையாக அந்தப் பிரிவுகளில் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இலங்கைப் போட்டியாளர் என்ற பெருமையையும் அனுதி குணசேகர பெற்றார். 

அதேநேரம் உலகம் முழுவதும் அதிக நம்பிக்கையுடன் இருந்த இந்தியாவைப் பிரதிநிதித்துவப்படுத்திய நந்தினி குப்தா, 72வது உலக அழகி போட்டியிலிருந்து வௌியேறியமை குறிப்பிடத்தக்கது.

Comments
0

MOST READ
01
02
03
04
05