May 31, 2025 - 10:12 PM -
0
வவுனியா பிரதேசசெயலகமும் பிரதேச கலாசார பேரவையும் இணைந்து வவுனியா இசை ஆர்வலர்களுக்கு களம் அமைத்துக் கொடுக்கும் முகமாக “வவுனியாவின் குரல் 2025”என்ற நிகழ்வை நடாத்தியிருந்தது.
அதற்கான முதல்சுற்றுப்போட்டிகள் கடந்தவாரம் ஆரம்பித்த நிலையில் நேற்றையதினம் இறுதிப்போட்டி நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தது.
இரு பிரிவுகளாக இடம்பெற்ற இப்போட்டியில் 18 வயதிற்குட்பட்ட பிரிவில் முதலாம் இடத்தை சதீசன் சுருதியும்,இரண்டாவது இடத்தை சந்திரகுமார் ரொசானியும், மூன்றாம் இடத்தை யோகநாதன் கிர்ஸாத் ஆகியோரும் பெற்றுக்கொண்டிருந்தனர்.
மேற்பிரிவில் முதலாம் இடத்தை மகேந்திரன் சிவசக்தி, இரண்டாம் இடத்தை சாந்தரூபன் கலாரஜினி, மூன்றாம் இடத்தை அல்போன்ஸ் மெலிஸ்ரன், செபஸ்ரியான் வினோஜன் ஆகிய இருவர் பெற்றுக்கொண்டனர்.
போட்டியில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களுக்கு 2025ஆம் ஆண்டு நடாத்தப்படுகின்ற பிரதேச கலாசார விழாவில் பரிசில்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கிவைக்கப்படவுள்ளது.
இறுதிப்போட்டி நிகழ்வில் வவுனியா மேலதிக அரசாங்க அதிபர் நா.கமலதாசன், பிரதேச செயலாளர் இ.பிரதாபன், உதவி பிரதேச செயலாளர் பு.உமாநந்தினி, கலாசாரஉத்தியோகத்தர் க.அபிராமி, அபிவிருத்தி உத்தியோகத்தர் சி.துஜான் உட்பட உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
--