May 31, 2025 - 10:33 PM -
0
ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் முறைகேடுகள் திருத்தபடாவிடின் எதிர்வரும் 4 ஆம் திகதி காலை 10.00 மணியளவில் ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் யாழ் மாவட்டத்தில் இடம்பெற்றது .
இதன் பொழுது இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் நிர்வாக சபை உறுப்பினர்கள் மற்றும் கல்வி திணைக்களத்தின் இடமாற்ற கொள்கையால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர் .
வெளி மாவட்டத்தில் ஆசிரியர்கள் பணியாற்றுவதனை தடுப்பது சங்கத்தின் நோக்கமல்ல எனவும் ஆசிரியர்கள் ஏமாற்றபடாது வெளிமாவட்டங்களில் அவர்கள் ஆற்றவேண்டிய காலத்தை வரையறுக்குமாறும் குறித்த கூட்டத்தில், தொழிற்சங்க தீர்மானம் தொடர்பில் பிரஸ்தாபிக்கபட்டது.
--

