Header Logo
Mogo Academy

கிழக்கு
ஐஸ் போதைப் பொருளுடன் வியாபாரி கைது

Jun 1, 2025 - 01:13 PM -

0

ஐஸ் போதைப் பொருளுடன் வியாபாரி கைது
Mobitel inner

ஐஸ் போதைப் பொருளுடன் கைதான ஐஸ் போதைப் பொருள் வியாபாரி மீது மேலதிக விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை பின் பகுதியில் ஐஸ் போதைப் பொருளுடன் நடமாடிய வியாபாரியை நேற்று (31) இரவு கல்முனை விசேட அதிரடிப் படையினர் கைது செய்துள்ளனர்.

 

கல்முனை விசேட அதிரடிப்படை புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது 39 வயது மதிக்கத்தக்க சந்தேக நபர் ஐஸ் போதைப்பொருளுடன் கல்முனை விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

அத்துடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 3 கிராம் 510 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் மீட்கப்பட்டதுடன் சந்தேக நபர் உட்பட  சான்றுப்பொருட்கள் யாவும் சட்ட நடவடிக்கைக்காக சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

 

மேலும் இந்த கைது நடவடிக்கையானது கல்முனை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.சி.எஸ்.ரத்நாயக்கவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்முனை விசேட அதிரடிப் படையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

 

மேற்குறித்த சந்தேக நபர் நீண்ட நாட்களாக மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து ஐஸ் போதைப் பொருளை விற்பனை செய்து வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 431 எலும்புக்கூடுகள் அடையாளம்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

அர்ச்சுனா திடீரென முளைத்த காளான்!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

தற்போதைய அரசாங்கத்தைக் குறை கூற முடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

மனோ கணேசன் பற்றி எதுவும் கூறமுடியாது!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

இது பழிவாங்கல் இல்லை, விசாரணை!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

பாரம்பரிய பாரந்தூக்கிகளை பயன்படுத்திய ரயில் ஊழியர்கள்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் பெரும் பதற்றம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

செம்மணியில் இதுவரை 414 எலும்புக்கூடுகள் அடையாளம்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

Mobitel Upahara