செய்திகள்
மருதானை மேம்பாலத்தால் பெரும் ஆபத்து!

Jun 1, 2025 - 01:28 PM -

0

மருதானை மேம்பாலத்தால் பெரும் ஆபத்து!

மருதானை மேம்பாலம் என்பது ஆயிரக்கணக்கான மக்கள் பிரதான வீதியை பாதுகாப்பாக கடக்க தினமும் பயன்படுத்தும் ஒரு மேம்பாலம் ஆகும். 

ஆனால் அது உண்மையில் பாதுகாப்பானதா? என்பது இப்போது ஒரு பிரச்சினையாக மாறியுள்ளது. 

தலைநகரின் பழமையான மேம்பாலங்களில் ஒன்றாகக் கருதப்படும் மருதானை மேம்பாலம் 1978 ஆம் ஆண்டு கட்டப்பட்டது. 

அதன் பின்னர் நீண்ட காலமாக பாலம் முறையாகப் பராமரிக்கப்படவில்லை என்பதை அதனை பார்க்கும் ஒவ்வொருவராலும் உணர முடியும். 

ஆனால் பொறுப்பானர்கள் எவரும் அது தொடர்பில் இதுவரை அவதானம் செலுத்தவில்லை. 

அண்மையில் பெய்த கனமழை மற்றும் பலத்த காற்று காரணமாக, மேம்பாலத்தின் கூரைகள் கழன்று விழுந்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மேம்பாலத்தில் நடந்து செல்லும் பாதசாரிகள் மற்றும் அருகிலுள்ள வர்த்தகம் செய்யும் மக்களும் இதனால் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர். 

இந்தப் பாலம் மக்களின் தலையில் இடிந்து விழுவதற்கு முன்பு விரைவாகச் சரிசெய்வது அதிகாரிகளின் பொறுப்பாகும்.

Comments
0

MOST READ
01
02
03
04
05