செய்திகள்
பேருந்து கட்டண திருத்தம் ஒத்திவைப்பு

Jun 1, 2025 - 08:01 PM -

0

பேருந்து கட்டண திருத்தம் ஒத்திவைப்பு

ஜூலை மாதம் நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டிருந்த வருடாந்த பேருந்து கட்டண திருத்தத்தை ஓகஸ்ட் மாதம் வரை ஒத்திவைக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, ஜூலை மாதத்தில் பேருந்து கட்டணங்களை திருத்துவது நடைமுறைக்கு சாத்தியமில்லை என்று அதன் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். 

கொழும்பில் இன்று (01) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05