செய்திகள்
ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயம்

Jun 1, 2025 - 08:54 PM -

0

ஐ.நா மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் இலங்கை விஜயம்

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் வோல்கர் டர்க் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். 

இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத ஆரம்பத்தில் அவர் நாட்டுக்கு வருகைத்தருவார் என்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

2016 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் ஒருவர் இலங்கைக்கு வருகை தருவது இதுவே முதல் முறையாகும். 

2016 ஆம் ஆண்டு, மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்தபோது, ​​அப்போதைய மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகர் செயிட் அல் ஹுசைன், நாட்டிற்கு விஜயம் செய்தார். 

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் இந்தப் பயணத்தின் போது, ​​இலங்கையில் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கான அரசாங்கத்தின் முயற்சிகள் குறித்து அதிக அவதானம் செலுத்தப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

தனது விஜயத்தின் போது, ​​பயங்கரவாதத் தடுப்புச் சட்டமூலத்தின் திருத்தம் உட்பட நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படும் வேலைத்திட்டம் குறித்து உயர்ஸ்தானிகர் விசேட கவனம் செலுத்தவுள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05