செய்திகள்
யாழ் பொது நூலகம் எரிந்து 44 ஆண்டுகள் நிறைவு

Jun 1, 2025 - 11:14 PM -

0

யாழ் பொது நூலகம் எரிந்து 44 ஆண்டுகள் நிறைவு

யாழ்ப்பாணம் பொது நூலகம் தீயூட்டி எரிக்கப்பட்டு 44 ஆண்டுகள் நிறைவடைவதை முன்னிட்டு, இன்று பிற்பகல் தமிழ்த் தேசிய பேரவையினரால் நினைவேந்தல் நிகழ்வு இடம்பெற்றது. 

பொது நூலகத்தின் முன்பாக இடம்பெற்ற குறித்த நினைவேந்தலில், பொதுச் சுடரினை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் ஏற்றிவைத்தார். 

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், தமிழ்த் தேசிய பேரவை உறுப்பினர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05