Jun 1, 2025 - 11:48 PM -
0
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணிக்கும் இடையிலான சந்திப்பு இன்று (1) இடம்பெற்றது.
இன்று இரவு யாழ்ப்பாணத்தில் உள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தில் இல்லத்தில் குறித்த சந்திப்பு இடம்பெற்றது.
சந்திப்பில், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியோரும்,
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் சார்பில் இணைத் தலைவர்களான தர்மலிங்கம் சித்தார்த்தன், சுரேஸ் பிரேமச்சந்திரன், வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் பாலச்சந்திரன் கஜதீபன் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
--