Jun 2, 2025 - 07:24 AM -
0
இலங்கையின் மூத்த தலைமுறையினருக்காக உருவாக்கப்பட்ட முதலாவதும் ஒரேயொரு ரியாலிட்டி நிகழ்ச்சியுமான தெரண 60 Plus சீசன் 6 இன் இறுதிப் போட்டி நேற்று (01) இரவு மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது.
பாடும் திறமை கொண்ட சிரேஷ்ட பிரஜைகளுக்காக நடத்தப்படும் Derana 60 Plus நிகழ்ச்சியானது 60 வயதுக்கு மேற்பட்டவர்களின் பாடும் திறமையை வௌிக்கொண்டு வருவதற்காக ஊடகமொன்றினால் நடத்தப்படும் ஒரேயொரு ரியாலிட்டி நிகழ்ச்சி என்பது சுட்டிக்காட்டத்தக்கது.
தெரண 60 Plus நிகழ்ச்சியின் மனம் கவர்ந்த பாடகர் தெரிவானது பார்வையாளர்களின் குறுந்தகவல் (SMS) வாக்களிப்பு மூலமாகவும், நிகழ்ச்சியின் திறமையான பாடகரை நடுவர் குழுவினரும் தேர்ந்தெடுப்பர்.
இறுதிப் போட்டிக்கான நடுவர்களாக விஷாரத எட்வர்ட் ஜெயக்கொடி, விஷாரத சுபானி ஹர்ஷானி மற்றும் விஷாரத ஜானக விக்ரமசிங்க ஆகியோர் இருந்தனர்.
அதன்படி, தெரண 60 Plus சீசன் 6 இன் இறுதிப் போட்டியில் குலரத்ன சில்வா மிகவும் மனம் கவர்ந்த பாடகராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்நிலையில், முகத்துவாரம் பகுதியில் இருந்து வருகைதந்து நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த பியல் குமார, தெரண 60 Plus சீசன் 6 இன் வெற்றியாளராக நடுவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டார்.
தெரண 60 Plus சீசன் 6 இறுதிப் போட்டியில் சுமித் பிரேமசிறி இரண்டாம் இடத்தையும், குலரத்ன சில்வா மூன்றாம் இடத்தையும் பிடித்தனர்.

