மலையகம்
ஆபத்தான மரங்களினால் இரண்டு நாள் விடுமுறை

Jun 2, 2025 - 12:58 PM -

0

ஆபத்தான மரங்களினால் இரண்டு நாள் விடுமுறை

ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட கர்பெக்ஸ் கல்லூரி மாணவர்களுக்கு இரண்டு நாட்களுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

 

வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர் விஜேந்திரனின் பணிப்புரைக்கமைய இன்று (02) மற்றும் நாளை (03) ஆகிய தினங்களில் கற்பித்தல் செயற்பாடுகள் நிறுத்தப்பட்டுள்ளது.

 

காற்றுடன் கூடிய காலநிலை தொடர்வதால் மாணவர்களின் பாதுகாப்பு நலன் கருதி பாடசாலை வளாகத்தில் ஆபத்தை  விளைவிக்கக்கூடிய வகையில் காணப்படும் மரங்களை வெட்டியகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதுடன் நேற்று (01) இரவும் பாரிய சைபிரஸ் மரமொன்று வேரோடு சறிந்து வீழ்ந்துள்ளது.

 

நீண்ட காலமாக ஆபாத்தை விளைவிக்ககூடிய அடையாளம் காணப்பட்ட மரங்களை வெட்டியகற்ற நோர்வூட் பிரதேசசெயலகம்,  நுவரெலியா மரக்கூட்டுத்தாபனம் மற்றும் கினிகத்தேனை மின்சார சபை ஆகியவற்றுக்கு எழுத்துமூல அறிவித்தல் விடுக்கப்பட்டிருந்த போதும் உரிய காலத்தில் மரங்களை வெட்டியகற்ற நடவடிக்கை எடுக்கவில்லை.

 

தற்போது அதிக காற்றுடன் கூடிய கன மழை காலநிலையில் மாணவர்களின் பாதுகாப்பு தொடர்பில் அச்சம் ஏற்பட்டுள்ள நிலையில்  ஹட்டன் வலயக்கல்விப்பணிமனை இரண்டு நாட்களுக்கு மாணவர்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளதுடன் குறித்த மரங்களை வெட்டியகற்ற நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்லூரி அதிபர் ஜேம்ஸ்விக்டர் தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05