செய்திகள்
மொட்டு கட்சி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

Jun 2, 2025 - 03:43 PM -

0

 மொட்டு கட்சி எடுத்துள்ள அதிரடி தீர்மானம்

கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவதற்காக தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்திற்கு தேவையான ஆதரவை வழங்குவதாக ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) தெரிவித்துள்ளது. 

இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது இதனைத் தெரிவித்தார். 

இலங்கை பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மேலும் கூறுகையில், 

"கொழும்பு மாநகர சபையில் அதிகாரத்தை நிலைநாட்டுவது தொடர்பாக, கொழும்பு மாநகர சபையின் அதிகார எல்லைக்குள் வசிக்கும் பெரும்பான்மையான மக்கள் தற்போதைய அரசாங்கத்திற்கு தங்கள் சம்மதத்தை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. கொழும்பு மாநகர சபை மக்கள் திசைகாட்டியை நிராகரிக்கும் சூழ்நிலையில், திசைகாட்டியை எதிர்க்கும் கட்சிகளின் கூட்டணியால் அமைக்கப்பட்ட அரசாங்கத்தை உருவாக்குவதற்கு ஒரு கட்சியாக நாங்கள் தேவையான ஆதரவை வழங்க விரும்புகிறோம்."

Comments
0

MOST READ
01
02
03
04
05