வணிகம்
சிறப்புக்களை கொண்டாடுதல்: வருடாந்த வியாபார விருதுகளில் ஊழியர்களது சாதனைகளை கௌரவித்த SDB வங்கி

Jun 2, 2025 - 03:44 PM -

0

சிறப்புக்களை கொண்டாடுதல்: வருடாந்த வியாபார விருதுகளில்  ஊழியர்களது சாதனைகளை கௌரவித்த SDB வங்கி

SDB வங்கியானது 2024 ஆம் ஆண்டிலான குறிப்பிடத்தக்க செயலாற்றுகைகளுக்காக அதனது ஊழியர்களது அதிசிறப்பான பங்களிப்புக்களை கௌரவிக்கவும் பாராட்டவுமாக அதனது பெருமைமிகுந்த SDB வங்கி வருடாந்த வியாபார விருதுகள் விழாவினை சமீபத்தில் நடாத்தியிருந்தது. இந்நிகழ்வானது உற்சாகப்படுத்தும் வேலை சூழலையும் மற்றும் அதனது வெற்றியை வழிநடாத்துவதில் ஊழியர்களது மதிப்பிடமுடியாத வகிபாகத்தினை கொண்டாடுதலையும் வளர்ப்பதிலான வங்கியின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியிருந்தது. 

கடந்த வருடத்தின் வியாபார செயலாற்றுகைகளின் பிரகாரம், SDB வங்கியின் களுத்துறை கிளையானது ஒட்டுமொத்த அதிசிறப்பான செயலாற்றுகை கிளையாக விளங்கி, குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பு மற்றும் சாதனைகளுக்கு உதாரணமாகியது. மேலதிகமாக, மத்திய, வடமேல் மற்றும் வடமத்திய வலயங்கள், நிறுவனத்தின் முழுமையிலுமாக கூட்டு முயற்சிகள் மற்றும் அணி அர்ப்பணிப்புகளை பிரதிபலித்து சிறப்பாக செயலாற்றிய வலய வகையின் கீழ், முறையே வெற்றியாளர்கள், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தினை பெற்றுக்கொண்டன. மேலதிகமாக, ஆதரவளித்த அனைத்து திணைக்களங்களுக்கும் 30 இற்கும் மேற்பட்ட விருது வகைகள் மற்றும் பாராட்டு விருதுகள் இவ்விழாவில் வழங்கி வைக்கப்பட்டன. 

வருடாந்த வியாபார விருதுகளானது அதனது துவக்கம் முதலாக, சிறப்பாக செயலாற்றிய ஊழியர்களை பாராட்டுவதிலும் அங்கீகரிப்பதிலுமான வங்கியின் அர்ப்பணிப்பிற்கொரு உண்மையான சான்றாக விளங்கி வருகின்றது. அதனது ஊழியப்படையை வலுவூட்டுவதனாலும் அவர்களது முயற்சிகளை அங்கீகரிப்பதனாலும், அதியுன்னதங்களை நோக்கி தொடர்ந்தும் போராட ஊழியர்களை ஆகர்ஷித்து, புத்தாக்கம் மற்றும் கூட்டுழைப்பின் சாரத்தினை மீளவலியுறுத்துகின்றது. 

SDB வங்கியின் நிறைவேற்று பணிப்பாளர்/ பிரதம நிறைவேற்று அதிகாரி, திரு. கபில ஆரியரத்ன அவர்கள், தன்னுடைய கருத்துக்களை இவ்வாறு பகிர்ந்துக்கொண்டார்: “எமது ஊழியர்களே SDB வங்கியின் இதயமும் ஆன்மாவும் ஆவார்கள். அவர்களது அர்ப்பணிப்பும், திறனும் ஆர்வமுமே எமது சமுதாயங்களிற்கு சேவைசெய்யவும் எமது இலக்குகளை அடையவும் எம்மை இயலச்செய்கின்றது. வருடாந்த வியாபார விருதுகள் 2024 ஆனது அவர்களது வெற்றியை கொண்டாடவும் அவர்கள் மதிக்கப்பட்டதாகவும் பாராட்டப்பட்டதாகவும் உணர்கின்ற கலாச்சாரத்தினை மேலும் உறுதியாக்கவுமான எமது அர்ப்பணிப்பினை வெளிப்படுத்துகின்றது. வரும் வருடங்களில் ஒட்டுமொத்த அமைப்பும் இதன் பங்குதாரர்களாகவிருக்கக்கூடிய வருடாந்த நிகழ்வொன்றாக இந்நிகழ்வின் எல்லையை விரிவுபடுத்த நாம் எதிர்பார்த்துள்ளோம்” 

“உங்களை மதிக்கின்ற வங்கி” என்கின்ற தனது நிறுவனமய அடிக்கோட்டினை SDB வங்கி பின்பற்றுவதனால், தன்னுடைய வாடிக்கையாளர் மீது மாத்திரமின்றி அதனது ஊழியர்களது நலவாழ்வு மற்றும் அபிவிருத்திகளையும் கருத்திற்கொண்டுள்ளது எனும் பெறுதியினை அழுந்தக்கூறுமுகமாக, இந்நிகழ்வானது அதனது நெறிமுறைகளை பிரதிபலித்திருந்தது. வருடாந்த வியாபார விருதுகள் 2024 போன்ற துவக்கங்களின் ஊடாக, SDB வங்கியானது ஒரு பெருமித உணர்வை வளர்ப்பதும் அதனது ஊழியப்படைக்கு மத்தியில் காணப்படக்கூடியவாறுமான, சிறப்புக்களும் அர்ப்பணிப்புக்களும் தொடர்ச்சியாக மதிக்கப்படுகின்ற வேலைத்தளத்தை உருவாக்குகின்ற அதன் நோக்கத்தினை மீளவலியுறுத்துகின்றது. 

SDB வங்கி: 

வாடிக்கையாளர் மைய மற்றும் ஒவ்வொரு தனிநபரினதும் தேவைகளுக்கென நேர்த்தியாக்கப்பட்ட பொருத்தமான ஆதரவிற்கென அர்ப்பணிக்கப்பட்ட, எதிர்காலத்திற்கு தயாரான வங்கியொன்றாக, கொழும்பு பங்குப் பரிவர்த்தனையின் பிரதான பலகை மற்றும் BB +(lka) பிட்ச் ரேட்டிங்கிலான பட்டியலுடன், இலங்கை மத்திய வங்கியினால் ஒழுங்குப்படுத்தப்படுகின்ற அனுமதிப்பெற்ற விசேடத்துவப்படுத்தப்பட்ட வங்கியொன்றாகும். நாடளாவியரீதியில் 94 கிளைகளின் வலையமைப்பினூடாக, வங்கியானது நாடுமுழுதும் அதனது சில்லறை, சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள், கூட்டுறவு, மற்றும் வியாபார வங்கியியல் வாடிக்கையார்களிற்கு நிதிச் சேவைகளின் பொருத்தமான வகைகளை வழங்குகின்றது. நிலைபேறான நடைமுறைகளின் ஊடாக உள்ளுர் சமுதாயங்கள் மற்றும் வியாபாரங்களை உயர்த்தும் துடிப்பான குவிமையத்துடனான சுற்றுச்சூழல், சமூக, மற்றும் ஆட்சி கோட்பாடுகள் SDB வங்கியின் நெறிமுறைகளில் ஆழப்பதிந்துள்ளன. வங்கியானது இலங்கையை புதிய உயரங்களிற்கு இட்டுச்செல்வதனை நோக்கமாகக்கொண்டு, பெண்களின் வலுப்படுத்தல், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளின் நிலைபேறான அபிவிருத்தி மற்றும் எண்ணிய உள்ளடக்கம் என்பவற்றை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ
01
02
03
04
05