வடக்கு
உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமானம்!

Jun 3, 2025 - 09:41 AM -

0

உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமானம்!

ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் நேற்று (02) இடம்பெற்றது.

 

வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

 

இதன்போது வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியில்  போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது சத்திய பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

 

குறித்த சத்தியபிரமாண நிகழ்வு  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,கூட்டணியின் செயலாளர் நாகலிங்கம் ரட்ணலிங்கம், தமிழீழமக்கள் விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தரான க.சந்திரகுலசிங்கம், ஜனநாயக போராளிகள் கட்சியின் பேச்சாளர் க.துளசி, தமிழீழ விடுதலை இயக்கம் சார்பில் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஆகியவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

 

குறித்த நிகழ்வில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள்,கூட்டணி கட்சிகளின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருத்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05