Jun 3, 2025 - 11:04 AM -
0
Cinnamon Nature Trails மற்றும் Cinnamon Hotelsகளுடனான பிரத்தியேக பங்காளித்துவத்தில் செலான் வங்கி, உலகப் புகழ்பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞரான Paul Goldstein நிகழ்த்திய வனவிலங்கு புகைப்படக் கலையை ஊக்குவிக்கும் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளின் முக்கியத்துவத்தை விளக்கும் மாலை நேர நிகழ்வான The Impossible Shotஐ ஏப்ரல் 6 ஆம் திகதி Cinnamon Lifeஇன் 22ஆம் தளத்தில் நடாத்தியது.
Cinnamon Nature Trails மற்றும் Cinnamon Hotelsஆல் ஏற்பாடு செய்யப்பட்ட இந் நிகழ்வு, வெளிப்படையான பேச்சாளரும் விருது பெற்ற புகைப்படக் கலைஞருமான Paul Goldstein தலைமையில், கமராவில் பதிவான இயற்கையின் தனித்துவமான மற்றும் மறக்க முடியாத தருணங்கள் வழியாக பார்வையாளர்களை ஒரு பயணத்தில் அழைத்துச் செல்வதை நோக்கமாகக் கொண்டிருந்தது. ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலர், புகைப்படக் கலைஞர் மற்றும் இயற்கை ஆர்வலராக தனது நாற்பது ஆண்டுகால தொழில்சார் வாழ்க்கையில் உலகம் முழுவதும் பயணம் செய்துள்ள Paul Goldstein, இயற்கையின் தனித்துவமான தருணங்களைப் படம்பிடிக்க ஏழு கண்டங்களிற்கும் பயணித்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயம் ஆகும். தெளிவாக கதை சொல்வதில் கைதேர்ந்த ஆற்றலைக் கொண்டுள்ளவர் என்ற உறுதியான நற்பெயரைக் கொண்ட Goldsteinனின் தனித்துவமான கருத்துகளை முன்வைக்கும் விதம் மற்றும் தலைமைத்துவம், உரையாடல் மற்றும் வனவிலங்கு பயணத்தின் பிரச்சாரகராக அவருக்கு பரவலான பாராட்டை பெற்றுத் தந்துள்ளது. ஆபிரிக்கா, ஆசியா, தென் அமெரிக்கா மற்றும் துருவப் பகுதிகள் முழுவதும் வனவிலங்கு சுற்றுப்பயணங்களை வழிநடத்திய அனுபவங்களைக் கொண்ட Goldstein, The Impossible Shotஇன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகள் மற்றும் காட்சி கதைசொல்லலின் மாலைக் கொண்டாட்டத்தை வழிநடத்தும் தனித்துவமான நிலையைப் பெற்றார்.
இலங்கையின் விருது பெற்ற வனவிலங்கு புகைப்படக் கலைஞர், சுற்றுச்சூழல் பாதுகாவலர் மற்றும் Cinnamon Nature Trailsஇன் துணைத் தலைவருமான சித்ரால் ஜயதிலகவின் 'Chasing a Dream' என்ற தலைப்பிலான விளக்கக்காட்சி இம் மாலை நிகழ்வை மேலும் மெருகூட்டியது. இந்த விளக்கக்காட்சி, வனவிலங்கு புகைப்படக் கலையுடன் வரும் தனித்துவமான சவால்கள் மற்றும் வெற்றிகளை ஆராய்ந்து, Goldsteinனின் சொந்தக் கண்ணோட்டத்தை பூர்த்தி செய்ய ஒரு தனித்துவமான பார்வையை வழங்கியது.
Cinnamon Nature Trails மற்றும் Cinnamon Hotels உடன் அன்புடன் அரவணைக்கும் வங்கி கொண்டுள்ள நீடித்த மற்றும் தொடர்ச்சியான ஒத்துழைப்பையும் அனுபவ அடிப்படையிலான நிகழ்வுகளை நடத்துவதற்கான அவர்களின் பகிரப்பட்ட தொலைநோக்குப் பார்வையையும் எடுத்துக்காட்டுவதற்கு சான்றாக அமைந்த இந்நிகழ்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பை ஊக்குவிக்கும் முயற்சியை பிரதிநிதித்துவப்படுத்தியதுடன் இலங்கையின் சுற்றுச்சூழல் அமைப்புகளைப் பாதுகாப்பதற்கான நெறிமுறைகளை உறுதி செய்யும் நடவடிக்கையையும் பிரதிநிதித்துவப்படுத்தியது.
இந் நிகழ்வின் முக்கியத்துவம் குறித்து செலான் வங்கியின் சந்தைப்படுத்தல் மற்றும் விற்பனைப் பிரிவின் உதவிப் பொது முகாமையாளர் ஆசிரி அபயரத்ன கருத்து தெரிவிக்கையில், எங்கள் வாடிக்கையாளர்களுக்கு உண்மையிலேயே மறக்கமுடியாத அனுபவங்களை வழங்குவதுடன், நமது நாட்டின் இயற்கை பொக்கிஷங்களை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்த பொது விழிப்புணர்வை அதிகரிக்கும் எங்கள் முயற்சியில் The Impossible Shot சமீபத்திய அத்தியாயமாகும். சுற்றுச்சூழல், நமது வாழ்க்கையை வளப்படுத்தும் மகத்தான செல்வம் என்பதை நாங்கள் அங்கீகரிக்கிறோம். எனவே, நாட்டிற்கும் அதன் பொருளாதாரத்திற்குமான நிலையான எதிர்காலத்தை ஆதரிக்கும் முகமாக, யானைகளின் ஒன்று கூடலை கொண்டாடும் நிகழ்வான Gathering of the Giantsஇன் அடுத்த நிகழ்வு உட்பட, மேலும் முயற்சிகளை இலகுவாக்க நாங்கள் விரும்புகிறோம். என்றார்.

