Jun 3, 2025 - 11:31 AM -
0
ஹட்டன் பொது பஸ்தரிப்பு நிலையத்தில் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகள் மற்றும் தனியார் பேருந்துகள் திடீர் சோதனைக்குற்படுத்தப்பட்டது.
நுவரெலியா மாவட்ட மோட்டர் வாகன பிரதான பரிசோதகர் சாலிய பண்டார மற்றும் ஹட்டன் போக்குவரத்து பிரிவு பொலிஸாரும் இணைந்து சோதனை நடவடிக்கையில் நேற்று (02) மாலை ஈடுபட்டனர்.
திடீர் பரிசோதனையின் போது 28 அரச மற்றும் தனியார் பேருந்துகள் சோதனையிட்ட போது 13 இ.போ.ச பேருந்துகளும் 13 தனியார் பேருந்துகள் பல்வேறு குறைபாடுகளுடன் சேவையில் ஈடுபட்டமை தெரியவந்துள்ளது.
குறைபாடுகள் அடையாளம் கானப்பட்ட 26 பேருந்துகள் எதிர்வரும் 14 நாட்களுக்குள் திருத்தியமைத்து மோட்டார் வாகன பரிசோதகரிடம் காட்டியதன் பின்னர் மீண்டும் சேவையில் ஈடுபட முடியும்.
பயணிகளின் பாதுகப்பு நலன் கருதி மேலும் நுவரெலியா மாவட்டத்தில் பொதுப் போக்குவரத்து சேவையில் ஈடுபம் அனைத்து பேருந்துகளும் பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் எனவும் மோட்டார் வாகன பரிசோதகர் சாலிய பண்டார தெரிவித்தார்.
--