வடக்கு
வவுனியாவில் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

Jun 3, 2025 - 12:27 PM -

0

வவுனியாவில் உள்ளூராட்சி உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம்!

இலங்கை தமிழரசுக்கட்சி சார்பில் வவுனியாவில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு வவுனியாவில் இன்று (03) இடம்பெற்றது.

 

வவுனியா, குருமன்காட்டில் அமைந்துள்ள கட்சியின் அலுவலகமான தாயகத்தில் குறித்த நிகழ்வு இடம்பெற்றிருந்தது.

 

இதன்போது வவுனியாவில் உள்ள நான்கு உள்ளூராட்சி மன்றங்களிலும் போட்டியிட்டு வெற்றிபெற்றவர்கள் மற்றும் விகிதாசார உறுப்பினர்கள் கலந்துகொண்டு தமது சத்திய பிரமாணத்தை மேற்கொண்டிருந்தனர்.

 

குறித்த நிகழ்வு தமிழரசுகட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம், செயலாளர் எம்.எ.சுமந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆகியவர்களின் முன்னிலையில் இடம்பெற்றது.

 

நிகழ்வில் வெற்றிபெற்ற உறுப்பினர்கள்,கட்சியின் ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05