Jun 3, 2025 - 01:17 PM -
0
மலையக பெருந்தோட்ட மக்களின் ஒட்டுமொத்த அபிவிருத்திக்கு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதே எமது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நோக்கமென மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தெரிவித்துள்ளார். அமைச்சர் வெளியீட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் வெளியீட்டுள்ள அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
உள்ளூராட்சி மன்ற தேர்தல் காலப்பகுதியில் நுவரெலியா மாவட்டத்தில் கொட்டகலை பகுதியில் 300 வீடுகள் காணப்படுகிறது. ஆனால் அங்கு அவர்களுக்கான மலசல கூட வசதிகள் இல்லை அந்த 300 வீடுகளில் 25 வீடுகளுக்கு ஒரு மலசலகூட வசதிகளே காணப்படுகிறது.
ஆகவேதான் எமது அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டத்தில் பத்தாயிரம் வீடமைப்பு திட்டங்கள் இந்திய அரசாங்கத்தோடு கலந்துரையாடி மலசல கூட வசதிகள் இல்லாதவர்களுக்கு மலசல கூட வசதிகள் மின்சாரம், குடிநீர், காணி போன்ற உட்கட்டமைப்பு வசதிகளை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
அதிகம் கல்வி இடைவிலகல் பிரதேசமாக மலையகத்தை பார்க்க கூடியதாக இருக்கிறது. அதனை தடுக்கும் நோக்கில் அவர்களுக்கான 6,000 ரூபாய் கொடுப்பனவு, விஞ்ஞான கல்வி, கணித கல்வி, சுகாதார மையங்கள் போன்றவற்றுக்கான சில நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளோம்.
நாங்கள் ஜனாதிபதி தேர்தல், பாராளுமன்ற தேர்தல், உள்ளூராட்சி மன்ற தேர்தல் என ஆகிய மூன்று தேர்தல்களிலும் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். ஆனால் தற்போது அமைச்சரவையில் மாற்றம் ஏற்பட போவதாகவும் பிரதமர் பதவியில் மாற்றம் ஏற்பட போவதாக பொய்யான வதந்திகளை எதிர்தரப்பினர் தெரிவித்து வருகின்றனர்.
இவர்கள் யார் என்றால் மக்களால் ஓரம்கட்டபட்டவர்கள் தான் இவ்வாறு பேசிக்கொண்டு இருக்கிறார்கள். அமைச்சரவையில் மாற்றத்தை கொண்டுவரவோ அல்லது இதனை விட்டு ஓடவோ நாங்கள் அரசியல் அதிகாரத்தை கையில் எடுக்கவில்லை. இது தொடர்பாக எந்த கலந்துரையாடலையும் எமது அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
எமது அரசாங்கம் ஊடாக துரிதமான நடவடிக்கையில் நாங்கள் இறங்கி இருக்கின்றோம் எமது பயணம் தொடர்ந்து கொண்டு இருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு பின்னர் கடந்த இரண்டு வாரத்தில் பிரதேச அபிவிருத்திகள், பொருளாதார மேம்பாடு, நாட்டில் இலஞ்சம் மற்றும் மோசடியில் இடுபட்ட திருடர்களுக்கு தண்டனை வழங்குதல் சட்ட நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம்.
தேர்தலுக்கு பின்னர் இந்த நாட்டின் சட்டத்திட்டங்களுக்கு அடிபணிந்து எமது அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறோம்.
மீன்பிடி, விவசாயம் போன்ற அனைத்து துறைக்குமான அபிவிருத்தி திட்டங்களுக்கு பணம் ஒதுக்கப்பட்டுள்ளது தற்போது நாடு சீரான முறையில் இயங்கி கொண்டு செல்லுகிறது.
சர்வதேச நிதியத்தோடு தொடர்பினை பேணிவந்தது எங்களுடைய அரசாங்கம் இல்லை அதனை முன்னதாக இருந்த அரசாங்கம் தான் சர்வதேச நிதியத்தோடு தொடர்பினை பேணிவந்தது ஜ.எம்.எப்.நிதியத்தில் இருந்து நாங்கள் விடுபட வேண்டுமாக இருந்தால் 2028 ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த கடன்களை செலுத்த முடியாமல் போனால் பொருளாதாரத்தில் நாம் வீழ்ச்சியடைந்த ஒரு நாடாக முத்திரை குத்தப்படுவோம்.
ஆகையால் தான் சில கோட்பாடுகளையும், பொறிமுறைகளையும் கையாள வேண்டியிருக்கிறது. நாங்கள் தேசிய உற்பத்தியினை அதிகரிக்க வேண்டும். தற்போது நாங்கள் ஜ.எம்.எப்.வலைக்குள் சிக்கபட்டு இருக்கிறோம். இந்த வலையில் சிக்க வைத்துதான் நாட்டை எமக்கு கையளித்தார்கள்.
2028 ஆம் ஆண்டு வரும் போது இந்த பிடியில் இருந்து வெளிவருவதற்கு நாம் அனைவருக்கும் கடமைப்பாடு உள்ளது. அமெரிக்கா ஜனாதிபதியின் வரி அதிகரிப்பினால் ஆடை தொழிற்துறை பாதிக்கப்பட்டுள்ளது.
எங்களுடைய பொறிமுறை சற்று வித்தியாசமானது நாங்கள் மன்றியிட்டு இன்னொரு நாடொடு போவதை தவிர்த்து ஒரு இணக்கப்பாட்டுடன் செயற்பட வேண்டும். நாட்டில் உள்ள அரச ஊழியர்களுக்கு ஆறு மாத காலத்தில் அதிகபட்ச சம்பள அதிகரிப்பை வழங்கியிருக்கின்றோம்.
கொழும்பு மாவட்டத்தில் சிறுமி ஒருவர் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் கவலைக்குறிய விடயமாகும். இவ்வாறான சம்பவம் ஒன்று இடம்பெறுகின்ற போது மூன்று முறையிலான விசாரனைகள் இருக்கவேண்டும்.
குற்றவியல் விசாரனை துஷ்பிரயோகத்திற்கான விசாரனையாக இடம்பெற்றிருக்க வேண்டும். இந்த சம்பவம் பாடசாலையில் இடம் பெற்றமையினால் கல்வி அமைச்சின் ஊடாக விசாரனைகளை முன்னெடுத்திருக்க வேண்டும் என தெரிவித்தார்.
--