சினிமா
முழு நேர அரசியலில் விஜய்

Jun 3, 2025 - 04:19 PM -

0

முழு நேர அரசியலில் விஜய்

தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் பயணத்தை தொடங்கிய விஜய் கடைசி படமாக 'ஜனநாயகன்' படத்தில் நடித்து வந்தார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததும் முழுநேர அரசியலில் விஜய் ஈடுபடுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதற்கேற்ப கடந்த 9 மாதங்களாக நடந்த 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பு தற்போது முடிவடைந்து உள்ளது.

 

இதையடுத்து த.வெ.க. தலைவர் விஜய் இன்று (03) முதல் முழு நேர அரசியலில் ஈடுபடப் போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.

 

மாமல்லபுரத்தில் நாளை (04) நடைபெற இருக்கும் மாணவ, மாணவிகளுக்கு கல்வி விருது வழங்கும் விழாவில் விஜய் பங்கேற்கிறார். மேலும் அவரது பிறந்தநாள் விழா வருகிற ஜூன் 22 ஆம் திகதி கொண்டாடப்பட இருக்கிறது. விழாவின் போது அடுத்தக்கட்ட அரசியல் அறிவிப்பை அவர் வெளியிட இருக்கிறார். இதைத் தொடர்ந்து முழுநேர அரசியலில் ஈடுபட உள்ள விஜய் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய இருக்கிறார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05