Jun 3, 2025 - 04:27 PM -
0
2025 ஆம் ஆண்டுக்கான ஹஜ் யாத்திரிகையை மேற்கொண்ட முதல் தொகுதி யாத்திரிகர்களை வழி அனுப்பும் வைபவத்தில் அமானா வங்கியும் பங்கேற்றிருந்தது. பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த நிகழ்வில், சவுதி அரேபியாவின் இலங்கைக்கான தூதுவர் காலித் பின் ஹமுத் அல் கஹ்தானி, தேசிய ஒருமைப்பாடுகள் பிரதி அமைச்சர் முனீர் முலாஃபர், மேல் மாகாண ஆளுனர் ஹனீஃப் யூசுஃப், முஸ்லிம் சமய விவகாரங்கள் மற்றும் கலாச்சார விவகார பணிப்பாளர் எம்.எஸ்.எம். நவாஸ், ஹஜ் குழுவின் தவிசாளர் ரியாஸ் மிஹுலர் மற்றும் அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர் ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஹஜ் யாத்திரிகர்களின் பயணத்துக்கு கைகொடுக்கும் வகையில், அமானா வங்கியினால் பிரத்தியேகமான அனுகூலங்கள் வழங்கப்பட்டிருந்தன. அதில், சவுதி ரியால்களுக்கு விசேட நாணயமாற்று வீதம், யாத்திரிகையின் போது அமானா டெபிட் கார்டை பயன்படுத்தி மேற்கொள்ளும் கொடுக்கல் வாங்கல்களுக்கு 10% Cashback (வாடிக்கையாளர் ஒருவருக்கு ரூ. 5,000/- வரை), ஐந்து அதிர்ஷ்டசாலி வெற்றியாளர்களுக்கு தங்க நாணய குலுக்கல் தெரிவு மற்றும் இலவச ஹஜ் பிரயாணப் பொதி போன்றன அவற்றில் அடங்கியிருந்தன.
வழி அனுப்பும் நிகழ்வில் அமானா வங்கியின் நுகர்வோர் வங்கியியல் மற்றும் சந்தைப்படுத்தல் உப தலைவர் சித்தீக் அக்பர் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த புனித யாத்திரையை மேற்கொள்வதனூடாக, யாத்திரிகரின் நம்பிக்கை மற்றும் இறைவனின் மீதான பக்தி போன்றன வெளிப்படுவதுடன், அவர்களுக்கு வழங்கக்கூடிய சிறந்த உதவிகளை, அனுகூலங்களை மற்றும் வெகுமதிகளை வழங்கி ஆதரவளிக்க முடிந்ததையிட்டு நாம் மகிழ்ச்சி கொள்கிறோம். இந்த முக்கியமான ஆன்மீக ரீதியான மைல்கல்லுக்கு ஆதரவளிப்பது என்பது வங்கியியலுக்கு அப்பாற்பட்டதாக அமைந்திருப்பதுடன் – எமது வாடிக்கையாளர்களின் முக்கியமான வாழ்க்கை அத்தியாயத்தில் அவர்களுடன் கூட இருப்பதை எடுத்துக் காட்டுகிறது. அவர்களின் மதசார் கடமையை கண்ணியத்துடனும், இலகுவாகவும் மற்றும் மனநிம்மதியுடனும் நிறைவேற்றுவதில் அங்கம் வகிப்பதையிட்டு நாம் பெருமை கொள்கிறோம்.” என்றார்.
இலங்கை மத்திய வங்கியின் அனுமதி பெற்று இயங்கும் நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாகவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனையில் பட்டியலிடப்பட்ட நிறுவனமாகவும் அமானா வங்கி பிஎல்சி திகழ்கின்றது. ஜித்தாவை தளமாகக் கொண்டியங்கும் IsDB குரூப் பிரதான பங்காளராக திகழ்கின்றது. IsDB குரூப் ‘AAA’ தரப்படுத்தலை தன்வசம் கொண்டுள்ள பல்தேசிய அபிவிருத்தி நிதிச் சேவைகளை வழங்கும் நிறுவனமாக திகழ்வதுடன், 57 நாடுகளில் அங்கத்துவத்தைக் கொண்டுள்ளது. வட்டிசாராத வங்கியியல் மாதிரியை கொண்டுள்ள அமானா வங்கியை, உலகின் உறுதியான 25 இஸ்லாமிய வங்கிகளில் ஒன்றாக ஏசியன் பாங்கர் அமைப்பினால் தரப்படுத்தப்பட்டிருந்தது. அமானா வங்கியின் தரப்படுத்தலை BBB- (lka) stable outlook உடன் முதலீட்டு தரத்துக்கு உயர்த்தியிருந்தது. அதனூடாக, வங்கியின் வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்துக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
அமானா வங்கி எவ்விதமான துணை அல்லது இணை நிறுவனங்கள் எதனையும் கொண்டிருக்கவில்லை என்பதுடன், அநாதரவான சிறுவர்கள் காப்பக அமைப்பான OrphanCare நம்பிக்கை நிதியத்தின் ஸ்தாபக அனுசரணையாளராக தனது ஈடுபாட்டை பேணி வருகின்றது.

