செய்திகள்
பஞ்சாப் கிங்ஸூக்கு ரோயல் செலஞ்சர்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கு!

Jun 3, 2025 - 09:27 PM -

0

பஞ்சாப் கிங்ஸூக்கு ரோயல் செலஞ்சர்ஸ் நிர்ணயித்த வெற்றி இலக்கு!

18 ஆவது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டி தற்போது ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும், பஞ்சாப் கிங்ஸ் அணிக்கும் இடையில் அகமதாபாத்தில் இடம்பெற்று வருகிறது. 

போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. 

இதற்கமைய முதலில் துடுப்பாடிய ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் 09 விக்கெட்டுக்களை இழந்து 190 ஓட்டங்களை பெற்றுள்ளது.

அந்த அணி சார்பில் துடுப்பாட்டத்தில் Virat Kohli அதிகபட்சமாக 43 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். 

பந்து வீச்சில் பஞ்சாப் கிங்ஸ் அணி சார்பில் Arshdeep Singh மற்றும் Kyle Jamieson தலா 03 விக்கெட்டுக்களை வீழ்த்தினர். 

இதன்படி ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு 191 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ