வணிகம்
செலான் வங்கி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) இரண்டாம் கட்ட செலான் சூரிய மின்சக்திக் கடன்கள் மற்றும் சிறப்பு தொழிற்பாட்டு மூலதன கடன்களைத் தொடங்குகிறது

Jun 5, 2025 - 10:52 AM -

0

செலான் வங்கி, சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) இரண்டாம் கட்ட செலான் சூரிய மின்சக்திக் கடன்கள் மற்றும் சிறப்பு தொழிற்பாட்டு மூலதன கடன்களைத் தொடங்குகிறது

செலான் வங்கி நெகிழ்வான நிதித் நிதித் தீர்வுகளை விரிவுபடுத்துவதன் மூலம் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் (SMEs) வளர்ச்சியை ஆதரிப்பதற்கான தனது உறுதிப்பாட்டில் தொடர்ந்து பயணிக்கிறது. வங்கி, தற்போது SMEகளிற்கு சூரிய மின்சக்தி மற்றும் தொழிற்பாட்டு மூலதனக் கடன்களை வழங்குகிறது. இது அவசர நிதி உதவி தேவைப்படும் வணிகங்களுக்கு முக்கிய நிதித் தெரிவுகளாக அமையும். 

செலான் வங்கியின் சூரிய மின்சக்திக் கடன்கள் SMEகளுக்கு மீள் புதுப்பிக்கத்தக்க வலுசக்தியை வணிக முதலீடாக ஏற்றுக்கொள்வதற்கான நெகிழ்வான நிதித் தெரிவை வழங்குகின்றது. செலானின் சூரிய மின்சக்திக் கடனுடன், SMEகள் தங்கள் வணிகங்களை மீள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியுடன் நடாத்திச் செல்வதுடன் வணிகங்களால் ஏற்படும் கார்பன் தடயத்தின் தாக்கத்தைக் குறைத்து நிலைத்தன்மையை ஊக்குவிக்கலாம். நாட்டின் நிலைபெறுதகு எரிசக்தி ஆற்றல் இலக்குகளுக்கு பங்களிக்கும் அதே வேளை இந்த முயற்சி SMEகளின் நிதி நம்பகத்தன்மை மற்றும் போட்டித்தன்மையை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. 

இது எரிசக்தி செலவுகள் மற்றும் கார்பன் தடம் ஆகியவற்றைக் குறைப்பதற்கான தெரிவுகளை ஆராயும் வணிக நிறுவனங்களுக்கு ஏற்ற திட்டமாகும். செலானின் சூரிய மின்சக்திக் கடன்கள் தொழில்துறை மற்றும் விவசாயத் துறைகளின் செயற்பாட்டுத் திறனை அதிகரிக்க உதவும். இந்த துறைகள் சூரிய மின்சக்தி கடன் திட்டத்தில் இருந்து ரூ.100 மில்லியன் வரையிலான கடன்களை நெகிழ்வான நிதி தெரிவுகளுடன் பெறலாம். கடன் பெறுநர்கள் முதல் ஐந்து வருடங்களுக்கு, வருடத்துக்கு 11.0% என்ற நிலையான வட்டி வீதத்தை தெரிவு செய்யலாம். அதனைத் தொடர்ந்து மீதமுள்ள இரு வருடங்களுக்கு 9.0% என்னும் கீழ் எல்லை வட்டி வீதத்துடன் ஒரு மாத AWPLR+1.0% (சராசரி எடையுள்ள பிரதம கடன் விகிதம்) என்ற வட்டி வீதத்தை தெரிவு செய்யலாம். நிதி நன்மைகளை வழங்கும் வகையில் திருப்பிச் செலுத்தும் காலம் ஏழு வருடங்கள் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 

விவசாயம், உற்பத்தி, தொழில்நுட்பம், கல்வி, சுகாதாரம் மற்றும் வர்த்தக வணிகங்கள் உட்பட்ட ஏற்றுமதி துறைகள் செலான் SME தொழிற்பாட்டு மூலதன கடன்களுக்கு தகுதியுடையவை ஆகும். மூன்று வருடங்களுக்கு, வருடத்துக்கு 11% என்ற நிலையான வீதத்தை தெரிவு செய்யலாம் அல்லது மேலும் நெகிழ்வான வட்டித் தெரிவுகளும் உள்ளன. குறைந்தபட்ச கடன் தொகையாக ரூ. 25 மில்லியன் முதல் அதிகபட்ச தொகையாக ரூ. 100 மில்லியன் வரை, முதல் வருடத்திற்கு மிதக்கும் வீதம் வருடத்துக்கு 9.5%இல் தொடங்குகிறது. மீதமுள்ள இரு வருடங்களுக்கு, ஒரு மாத AWPLR + 1.0% அடிப்படையில் பெற்றுக்கொள்ளலாம். 

SMEகளின் அவசர நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் நிதித் தெரிவுகளை வழங்குவதன் மூலம் வணிக மேம்பாட்டில் கவனம் செலுத்தப்படுகிறது. எவ்வாறாயினும், செலான் சூரிய மின்சக்திக் கடன்கள் மற்றும் தொழிற்பாட்டு மூலதனக் கடன்களை அறிமுகப்படுத்துவதற்கான முன்முயற்சியானது, குறிப்பாக நடுத்தர சந்தை வணிகங்களுக்கு தற்போதைய செயன்முறைகளை நடைமுறைப்படுத்தவும் செயல்திறன் மற்றும் உற்பத்தித்திறனை உயர்த்துவதற்கும் ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

கிளைக் கடன் பிரிவின் பிரதிப் பொது முகாமையாளர் திரு.ரணில் திஸாநாயக்க கருத்து தெரிவிக்கையில், “அன்புடன் அரவணைக்கும் வங்கி என்ற வகையில், வணிகங்களுக்கு இலாபத்தையும் வளர்ச்சியையும் தரக்கூடிய எளிமையான தீர்வுகள் மூலம் மக்களையும் வணிகத்தையும் ஊக்குவிப்பதற்கான வாய்ப்புக்களை வழங்குவதில் முதலீடு செய்துள்ளோம். செலான் சூரிய மின்சக்திக் கடன்கள் மற்றும் தொழிற்பாட்டு மூலதனக் கடன் திட்டங்களின் மூலம், SMEகளின் ஆற்றல்களை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், தொழில்முனைவோர் மற்றும் வணிக முயற்சிகள் வளர்ச்சியடைவதற்கான வாய்ப்பை அளிக்கும் வகையில் நிதிச் சூழலை மாற்றும் அபிலாஷைக்கான எங்கள் உறுதிப்பாட்டை இது வெளிப்படுத்துகிறது.” என்றார். 

செலான் சூரிய மின்சக்திக் கடன் திட்டம் மற்றும் தொழிற்பாட்டு மூலதனக் கடன் ஆகியவற்றுடன் தங்கள் நிதித் தீர்வுகளை விரிவுபடுத்துவதற்கான செலான் வங்கியின் தீர்மானம், பயனுள்ள நிதிச் சேவைகளை வழங்குவதில் வங்கியின் அர்ப்பணிப்புக்கு சான்றாக அமைகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05