Jun 5, 2025 - 11:00 AM -
0
2025ஆம் ஆண்டு நடைபெறும் மூன்றாவது தேசிய தொழில்துறை கண்காட்சிக்கு செலான் வங்கி ஆதரவளிக்க உள்ளது. கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு மற்றும் கைத்தொழில் அபிவிருத்தி சபையால் ஏற்பாடு செய்யப்படும் இந் நிகழ்வு ஜூன் 19 முதல் 22 வரை பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெறவுள்ளது.
இலங்கையின் தொழில்துறையை முன்னிலைப்படுத்தி அதனை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இந் நிகழ்வு, சந்தை ஒருங்கிணைப்பு, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் கூட்டிணைவை வளர்ப்பதில் அன்புடன் அரவணைக்கும் வங்கியின் திறனையும் பங்களிப்பையும் நிரூபிக்கின்றது.
பயன்படுத்தப்படாத சந்தை வாய்ப்புகளில் இலங்கையின் தொழில்துறை வளர்ச்சியை முன்னெடுத்துச் செல்வது, என்ற இந்த ஆண்டின் கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு இந் நிகழ்வு சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு (SMEs) தனிப்பயனாக்கப்பட்ட நிதித் தீர்வுகளை வழங்கும். மேலும், இந் நிகழ்வு நாட்டின் பொருளாதார வளர்ச்சியை துரிதப்படுத்தி, திறன்களை வெளிக்கொண்டுவரக்கூடிய கருத்துக்கள் மற்றும் தீர்வுகளை பரிமாறிக் கொள்ள உதவும்.
இந்த நிகழ்வின் முன்முயற்சிக்கு மேலும் ஆதரவளிக்கும் வகையிலும் நம்பகமான நிதி இடைத்தரகர் என்ற வகையிலும் செலான் வங்கி, தொழிலதிபர்கள், ஏற்றுமதியாளர்கள் மற்றும் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களின் தனித்துவமான தேவைகளைப் பூர்த்தி செய்ய மறுநிதியளிப்பு வசதிகள் மூலம் வலுப்படுத்தப்பட்ட சிறப்பு வங்கித் தீர்வுகளையும் வழங்கும்.
இலங்கையின் தொழில்துறையின் வளர்ச்சியிலும் நாட்டின் பொருளாதார செழிப்பு ஊடாக எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்த விரும்பும் அனைத்து பங்குதாரர்களுக்கும் தேசிய தொழில்துறை கண்காட்சி 2025 ஒரு சிறந்த தளமாகும்.
அன்புடன் அரவணைக்கும் வங்கி, அதன் தொடர்ச்சியான ஆதரவின் மூலம் நாட்டின் தொழில்துறையின் வளர்ச்சியை விரிவுபடுத்துவதுடன் அதன் நிலைத்தன்மையை வலுப்படுத்தவும் அதன் பரந்த மற்றும் சிறப்பு வங்கி தீர்வுகளை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
செலான் வங்கி, கண்காட்சியின் போது தங்கள் காட்சிக்கூடத்திற்கு வருகை தந்து, அவர்களின் பரந்த நிதிச் சேவைகளைப் பற்றி மேலும் அறியவும், வளர்ச்சிக்கான வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடவும் பங்கேற்பாளர்களை அன்புடன் அழைக்கிறது.

