சினிமா
கசிந்த தக் லைஃப் காட்சி

Jun 5, 2025 - 11:48 AM -

0

கசிந்த தக் லைஃப் காட்சி

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியாகியுள்ள தக் லைஃப் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இப்படத்தில் கமல்ஹாசனுடன் திரிஷா, சிலம்பரசன், அபிராமி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 

இந்நிலையில், திரிஷா மற்றும் கமல்ஹாசன் இடையிலான படு நெருக்கமான காட்சிகள் இணையத்தில் கசிந்து, ரசிகர்களை திணறடித்துள்ளன. இந்தக் காட்சிகள் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளின்போது வெளியாகி, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.

 

திரிஷா, இப்படத்தில் தனது கதாபாத்திரம் குறித்து பேசும்போது, 'எங்கள் ஜோடி திரையில் மாயாஜாலமாக இருக்கும்.

 

ஆனால், இந்தக் காட்சிகள் சிலரால் விமர்சிக்கப்படலாம் என்பது தெரிந்தே இதில் நடித்தேன்,' என்று கூறியுள்ளார். இந்தக் கசிவு குறித்து படக்குழு இதுவரை அதிகாரபூர்வமாக எதுவும் தெரிவிக்கவில்லை.

 

இந்தக் காட்சிகள், கேங்க்ஸ்டர் கதைக்களத்தில் உருவாகியுள்ள தக் லைஃப் படத்தின் தீவிரத்தை மேலும் எடுத்துக்காட்டுவதாக ரசிகர்கள் கருதுகின்றனர்.

 

இருப்பினும், இணையத்தில் கசிந்த இந்தக் காட்சிகள் திரையரங்க அனுபவத்தை பாதிக்கலாம் என அஞ்சப்படுகிறது. 
 

Comments
0

MOST READ
01
02
03
04
05