Jun 5, 2025 - 12:11 PM -
0
சசிக்குமார் இயக்கத்தில் வந்த சுப்ரமணியபுரம் படம் எவ்வளவு வரவேற்பை பெற்றது என சொல்லி தெரியவேண்டியது இல்லை. தற்போதும் பேசப்படும் படமாக அது இருந்து வருகிறது.
அந்த படத்தில் மொக்கசாமி என்ற கதாபாத்திரத்தில் நடித்து இருந்தவர் இலைக்கடை முருகன். அவர் மேலும் சில படங்களிலும் நடித்து இருக்கிறார்.
கொம்பன், வேலாயுதம் போன்ற படங்களில் அவர் நடித்துள்ளார்.
சுப்ரமணியபுரம் பட புகழ் நடிகர் இலைக்கடை முருகன் (Subramaniapuram Actor Ilaikadai Murugan) மதுரையில் இலைக்கடை வைத்து இருப்பதால் அவருக்கு இப்படி ஒரு பெயர் வந்தது. சமீபத்தில் உடல்நிலை பாதித்து அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (04) காலமானார்.
அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.