Jun 5, 2025 - 12:41 PM -
0
சுற்றுச் சூழல் தினத்தை முன்னிட்டு முல்லைத்தீவு கரையோரப் பிரதேசத்தினை தூய்மையாக்கும் பணி நேற்றைய தினம் (04) காலை 7.00 மணியளவில் கரையோரப் பிரதேசங்களான செல்வபுரம் மற்றும் கோவில் குடியிருப்பு பகுதிகளில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.எஸ்.குணபாலன் தலைமையில் நடைபெற்றது.
முல்லைத்தீவு மாவட்டத்தினை அழகுபடுத்தி தூய்மைப்படுத்தும் நிகழ்வாக முல்லைத்தீவு மாவட்ட செயலகம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச செயலகத்தின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.
குறித்த பணியில் மாவட்ட திட்டமிடல் பணிப்பாளர், உதவித் திட்டமிட் பணிப்பாளர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் உதவிப் பணிப்பாளர், கரைதுறைப்பற்று பிரதேசசபையின் செயலாளர், கரையோரம் பேணல் பாதுகாப்புத் திணைக்களத்தினர், ஏனைய உத்தியோகத்தர்கள், கிராம அலுவலகர்கள்,பொலிஸார் ,கடற்றொழில் மீனவ சங்கத்தினர்,சமாசத்தினர், சம்மேளனத்தை சேர்ந்தவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
--