விளையாட்டு
ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்

Jun 7, 2025 - 10:34 AM -

0

ஜோகோவிச்சை வீழ்த்தி இறுதிச் சுற்றுக்கு முன்னேறினார் சின்னர்

பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்று வருகிறது. 

இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவின் அரையிறுதி ஆட்டத்தில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச், இத்தாலியின் ஜானிக் சின்னர் உடன் மோதினார். 

இதில் சிறப்பாக ஆடிய சின்னர் 6-4, 7-5, 7-6 (7-3) என்ற செட் கணக்கில் வென்று இறுதிப்போட்டிக்கு முன்னேறினார். 

நாளை நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் சின்னர், அல்காரசுடன் மோதுகிறார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05