விளையாட்டு
7ஆவது முறையாக நோர்வே செஸ் சம்பியனான கார்ல்சன்!

Jun 7, 2025 - 11:38 AM -

0

7ஆவது முறையாக நோர்வே செஸ் சம்பியனான கார்ல்சன்!

உலகின் முதல்நிலை வீரரான மாக்னஸ் கார்ல்சன் 7ஆவது முறையாக நோர்வே செஸ் சம்பியன் பட்டத்தை வென்றார். 

நோர்வேயில் இன்று நடைபெற்ற கடைசி சுற்றுப் போட்டியில் மாக்னஸ் கார்ல்சன் அர்ஜூன் எரிகைசியுடன் விளையாடினார். 

இந்தப் போட்டியில் கறுப்பு நிற காய்களுடன் களமிறங்கிய கார்ல்சன் தொடர்ச்சியாக 53ஆவது நகர்த்தலில் இருந்து செக் வைத்தார். அர்ஜூன் எரிகைசிக்கு வேறு வழியில்லாமல் அவரது 56ஆவது நகர்த்தலில் போட்டி சமநிலையில் முடிந்தது. 

குகேஷ் முன்னாள் சாம்பியன் கரானாவுடன் தோல்வியுற்றதால் கார்ல்சன் சம்பியனாக மாறினார். 

பெண்கள் பிரிவில் உக்ரைனின் அனா முஸிஷுக் சாம்பியன் பட்டம் வென்றார். 

ஆடவர் ஓபன் பிரிவில் கடைசி சுற்றுக்குப் பிறகு புள்ளிப் பட்டியல் 

1. மாக்னஸ் கார்ல்சன் - 16 புள்ளிகள் 

2. ஃபபியானோ கரானா - 15.5 புள்ளிகள் 

3. டி. குகேஷ் - 14.5 புள்ளிகள் 

4. ஹிகரு நகமுரா - 14 புள்ளிகள் 

5. அர்ஜுன் எரிகைசி - 13 புள்ளிகள் 

6. வெய் யி - 9.5 புள்ளிகள்

Comments
0

MOST READ
01
02
03
04
05