சினிமா
திடீரென திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்!

Jun 7, 2025 - 08:26 PM -

0

திடீரென திருமணம் செய்து கொண்ட தமிழ் நடிகர்!

தமிழ் திரை உலகின் ஹீரோ ஒருவர், திடீரென திருமணம் செய்து கொண்டதாக தனது சமூக வலைத்தளத்தில் புகைப்படத்துடன் அறிவித்துள்ள நிலையில், ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். 

தமிழ் திரை உலகில் பல திரைப்படங்களில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் கிருஷ்ணா. இவர் பிரபல இயக்குனர் விஷ்ணுவர்தன் சகோதரர் என்பது குறிப்பிடத்தக்கது. 

மணிரத்னம் இயக்கிய ’அஞ்சலி’ என்ற திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கிருஷ்ணா, ’கழுகு’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகினார். 

அதன் பிறகு, யாமிருக்க பயமேன், வானவராயன் வல்லவராயன் உள்ளிட்ட சில படங்களில் நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இவர் ஒரு சில திரைப்படங்களை தயாரித்தும் உள்ளார். 

இந்த நிலையில், கடந்த 2014ஆம் ஆண்டு ஹேமலதா என்பவரை கிருஷ்ணா திருமணம் செய்தார். ஆனால், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். 

அதன் பின்னர் தற்போது, திடீரென தான் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டதாகவும், புதிய பயணம் தொடங்கி இருப்பதாகவும் அறிவித்துள்ளார். 

ஆனால், இந்த புகைப்படத்தில் மணமக்கள் முகம் தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும், மணமக்களுக்கு ரசிகர்கள் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05