Jun 8, 2025 - 08:53 AM -
0
நடப்பு ஆண்டுக்கான தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் நேற்று (07) ஆரம்பமாகியது.
இதில், 100 மீட்டர் மகளிர் தடை ஓட்ட போட்டியில் இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி 12.99 விநாடிகளில் பந்தய இலக்கை கடந்து முதல் இடம் பிடித்து தங்கம் வென்றார். ஜப்பான் வீராங்கனைகள் 2 ஆவது மற்றும் 3 ஆவது இடம் பிடித்துள்ளனர்.
பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பூஜா வரலாற்று சாதனயாக பந்தய தூரத்தை 4.11.65 நிமிடத்தில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார்.
பெண்களுக்கான 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் சுதீக்ஷா வத்லூரி, அபிநயா ராஜராஜன், சிநேகா எஸ்எஸ், நித்யா காந்தே ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது.
ஆண்களுக்கான 100 மீட்டர் ரிலே தொடர் ஓட்டத்தில் இந்தியாவின் குரீந்தர்வீர் சிங், அனிமேஷ் குஜுர், மணிகண்டா ஹாப்லிதார், ஆம்லான் போர்கோஹெய்ன் ஆகியோர் இணைந்த அணி தங்கம் வென்றது.
ஆண்களுக்கான மும்முறை தாண்டுதலில் முன்னாள் ஆசிய சாம்பியன் அப்துல்லா அபுபக்கர் தங்கம் வென்றார்.
ஆண்களுக்கான 110 மீட்டர் தடை தாண்டும் ஓட்டத்தில் இந்தியாவின் தேஜஸ் சிர்சே தங்கம் வென்றார்.
தைவான் தடகளப் போட்டியின் முதல் நாளில் இந்திய அணி 6 தங்கம் வென்று அசத்தியது.

