Jun 8, 2025 - 03:04 PM -
0
நடிகை அனுஷ்கா ஷெட்டியின் புகைப்படத்தால் ஐதராபாத்தின் முக்கிய பகுதியில் 40 விபத்துகள் நிகழ்ந்ததாக இயக்குனர் க்ரிஷ் கூறி இருக்கிறார்.
43 வயதிலும் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் அனுஷ்கா. 2005 ஆம் ஆண்டு 'சூப்பர்' படத்தின் மூலம் அறிமுகமான அனுஷ்கா, 15 ஆண்டுகளுக்கும் மேலாக தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்து வருகிறார். 'அருந்ததி', 'ருத்ரமாதேவி' போன்ற பெண்களை மையப்படுத்திய படங்களில் நடித்து பாராட்டுகளைப் பெற்ற இவர், 2017 ஆம் ஆண்டு வெளியான 'பாகுபலி' படம் மூலம் பான் இந்தியா நாயகியானார். இதையடுத்து அப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடித்தார்.
உலகம் முழுவதும் ₹1,700 கோடி வசூலித்த இப்படம், அதிக வசூல் செய்த இந்திய படங்களில் ஒன்றாகும். 43 வயதாகும் இவர் இன்னும் திருமணம் செய்து கொள்ளவில்லை. பிரபாஸுடன் காதல் என்று கிசுகிசுக்கள் வந்தன. ஆனால் அதை இருவருமே மறுத்தனர். 'கிங்' படத்தில் நாகார்ஜுனாவுக்காக ஒரு பாடலுக்கு நடனமாடிய பிறகு, அவர்களுக்கிடையே காதல் என்று செய்திகள் பரவின. பின்னர் கோபிசந்துடனும் நெருக்கமாக இருந்தார். இவர்கள் இருவரும் தெலுங்கு சினிமாவின் அடுத்த ஜோடி என்று பேசப்பட்டது. ஆனால் கோபிசந்த் 2013 இல் ரேஷ்மாவை மணந்தார்.
அனுஷ்காவின் சொத்து மதிப்பு சுமார் ₹133 கோடி. மாத வருமானம் ₹1 கோடி. ஒரு படத்துக்கு ₹6 கோடி சம்பளம் வாங்குகிறார். விளம்பரங்கள் மூலம் ஆண்டுக்கு ₹12 கோடி வருமானம் ஈட்டுகிறார். நடிகை அனுஷ்கா நடிக்க வரும் முன் யோகா டீச்சராக பணியாற்றினார். இவர் நடிப்பில் தற்போது காட்டி என்கிற திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஆக்ஷன் ஹீரோயினாக நடித்துள்ளார்.
அனுஷ்கா. க்ரிஷ் இயக்கியுள்ள காட்டி திரைப்படம் ஜூலை மாதம் திரைக்கு வர உள்ளது.
இந்நிலையில், நடிகை அனுஷ்கா பற்றிய ஷாக்கிங் தகவலை காட்டி பட இயக்குனர் க்ரிஷ் தெரிவித்துள்ளார். இவர் இதற்கு முன்னர் அனுஷ்காவை வைத்து வேதம் என்கிற தெலுங்கு படத்தை இயக்கினார். இது தமிழில் வானம் என்கிற பெயரில் ரிலீஸ் ஆனது.
அதில் சிம்பு நாயகனாக நடித்திருந்தார். இப்படம் ரிலீஸ் ஆன சமயத்தில் அதன் விளம்பரத்திற்காக அனுஷ்காவின் மிகப்பெரிய பேனரை ஐதராபாத்தில் உள்ள பஞ்சகுட்டா என்கிற பகுதியில் வைத்திருந்தார்களாம். அனுஷ்கா அப்படத்தில் கிளாமராக நடித்திருந்ததால், அவரின் பேனர் அந்த பகுதியாக சென்ற வாகன ஓட்டிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அனுஷ்காவின் பேனரை பார்த்தபடியே ஓட்டி, 40 இற்கும் மேற்பட்ட விபத்துகள் அப்பகுதியில் நிகழ்ந்ததாம். இதையடுத்து போக்குவரத்து பொலிஸார் அந்த பேனரை அங்கிருந்து நீக்கிய பின்னரே விபத்து நிகழாமல் இருந்ததாம்.