Jun 8, 2025 - 08:01 PM -
0
சர்வதேச பொது மற்றும் தனியார் சேவைகள் குழுவின் தலைவரும், சர்வதேச கல்வி, கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டு தொடர்பான துறைசார் கொள்கைகளை மேற்பார்வையிடும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) துறைசார் கொள்கைகள் துறையின் தலைவருமான ஒலிவர் லியாங்குடன் இ.தொ.கா தலைவர் செந்தில் தொண்டமான் கலந்துரையாடல் மேற்கொண்டார்.
இக்கலந்துரையாடலின் போது கல்வி, சுகாதார வசதிவாய்ப்பு, போக்குவரத்து, சுற்றுலா மற்றும் பல்வேறு தொழில்த்துறைகளில் பெருந்தோட்ட இளைஞர்கள் எதிர்கொள்ளும் சவால்களை குறித்து எடுத்துரைத்துரைக்கப்பட்டது.
பெருந்தோட்டத் பகுதிகளை சேர்ந்த இளைஞர்கள் அரச மற்றும் தனியார் துறைகளில் பணியாற்றி வருகின்றனர். அவர்கள் பணியாற்றும் போது தொழில் ரீதியாக எதிர்கொள்ளும் சவால்களுக்கு முகங்கொடுப்பதற்கான வழிகாட்டல்களை சர்வதேச தொழிலாளர் அமைப்பு வழங்க வேண்டும் என்பதோடு, அவர்களுடைய எதிர்கால தொழில்சார் திட்டங்களுக்கு ILO முழுமையான ஆதரவு வழங்க வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டது. முன்வைக்கப்பட்ட கோரிக்கையை ஒலிவர் லியாங்கு ஏற்றுக்கொண்டதுடன், அதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வதாக செந்தில் தொண்டமானிடம் ஒலிவர் லியாங்கு உறுதியளித்தார்.