Jun 8, 2025 - 11:14 PM -
0
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடர் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடைபெற்றது.
பெண்கள் இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இத்தாலியின் ஜாஸ்மின் பவுலினி-சாரா எர்ரானி ஜோடி, செர்பியாவின் அலெக்சாண்ட்ரா க்ருனிக்-கஜகஸ்தானின் அன்னா டேனிலினா ஜோடியுடன் மோதியது.
இதில் சிறப்பாக ஆடிய இத்தாலி ஜோடி 6-4, 2-6, 6-1 என்ற செட் கணக்கில் வென்று சம்பியன் பட்டம் பெற்று அசத்தியது.

