சினிமா
முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் அமலா ஷாஜி

Jun 9, 2025 - 12:27 PM -

0

முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் அமலா ஷாஜி

இன்ஸ்டாகிராம் மூலம் பிரபலமான அமலா ஷாஜி, தனது அழகு மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களால் இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றவர்.

 

சமூக வலைதளங்களில் தனது தனித்துவமான பாணியால் கவனம் ஈர்த்த அமலா, தற்போது தமிழ் சினிமாவில் முக்கிய பாத்திரத்தில் அறிமுகமாகவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

முன்னணி நடிகர் ஜெயம் ரவி நடிப்பில், ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஜீனி’ திரைப்படத்தில் அமலா ஷாஜி முக்கிய பாத்திரத்தில் நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.

 

இந்தப் படத்தில் நடிகை கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடிக்கிறார். படத்தின் ஃபிளாஷ்பேக் காட்சிகளில் கீர்த்தி ஷெட்டியின் இளம் வயது கதாபாத்திரத்தில் அமலா ஷாஜி நடிக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

இயக்குநர் ஆனந்த் ஷங்கரின் இந்த ஆக்‌ஷன்-பேண்டஸி படத்தில் ஜெயம் ரவியுடன் க்ரித்தி ஷெட்டி, வாமிகா கபி உள்ளிட்டோரும் நடிக்கின்றனர்.

 

இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியாகவிருக்கிறது. இந்தத் தகவல் இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அமலா ஷாஜியின் ரசிகர்கள் மத்தியில் இது பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

இன்ஸ்டாகிராமில் அவரது புகைப்படங்கள் ஏற்கனவே வைரலாகி வரும் நிலையில், ‘ஜீனி’ படம் மூலம் அவரது சினிமா அறிமுகம் அவரது புகழை மேலும் உயர்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Comments
0

MOST READ
01
02
03
04
05