Jun 9, 2025 - 07:11 PM -
0
தனது தவறுக்காக ஷ்ரேயாஸ் ஐயர் தன்னை அறைந்திருக்க வேண்டும் என பஞ்சாப் கிங்ஸ் வீரர் ஷஷாங்க் சிங் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பெங்களூரு அணி நிர்ணயித்த 191 ஓட்டங்கள் இலக்கை நோக்கி ஆடியதில் ஷஷாங்க் சிங் பெரிதளவில் பங்கு வகித்தார்.
வெற்றிக்காக கடைசிவரை களத்தில் நின்ற அவர், 30 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 61 ஓட்டங்கள் விளாசினார்.
எனினும் 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்று மகுடம் சூடியது.
இந்த நிலையில், பத்திரிகை நேர்காணல் ஒன்றில் பேசியுள்ள ஷஷாங்க் சிங் (Shashank Singh), 'ஷ்ரேயாஸ் ஐயர் என்னை அறைந்திருக்க வேண்டும், நான் அதற்கு தகுதியானவன். இறுதிப்போட்டியில் இருந்து என் தந்தை என்னிடம் பேசவில்லை.
நான் சாதாரணமாக இருந்தேன், நான் தோட்டத்தில் கூட அல்ல கடற்கரையில் நடந்து கொண்டிருந்தேன். இது ஒரு முக்கியமான நேரம், நான் இதை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கவில்லை என்பதில் ஷ்ரேயாஸ் தெளிவாக இருந்தார்.
ஆனால் பின்னர் அவர் என்னை இரவு உணவிற்கு வெளியே அழைத்துச் சென்றார்' என தெரிவித்துள்ளார்.

