கிழக்கு
போரதீவுப்பற்று பிரதேசசபையின் முதல் அமர்வு

Jun 10, 2025 - 10:00 AM -

0

போரதீவுப்பற்று பிரதேசசபையின் முதல் அமர்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ளூராட்சிமன்றங்களை அறிவிக்கும் திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையின் முதல் அமர்வானது அமர்வானது நேற்று (09) பிற்பகல் நடைபெற்றது.

 

போரதீவுப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் தலைமையில் இந்த சபை அமர்வு நடைபெற்றது.

 

நேற்றைய சபை அமர்வினை பிரதேசசபையின் செயலாளர் எஸ்.பகீரதனின் ஒழுங்கமைப்பில் நடைபெற்றது.

 

இதன்போது சபைக்கு தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர்கள் தவிசாளர் மேனன்,உபதவிசாளர் தங்கராசா கஜசீலன் உட்பட உறுப்பினர்கள் பிரதேசசபையின் உறுப்பினர்கள், இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான இரா.சாணக்கியன்,ஞா.சிறிநேசன் கட்சிகளின் முக்கிஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

 

இதன்போது தமிழர் விடுதலைப்போராட்டத்தில் உயிர்நீர்த்த அனைவரையும் நினைவுகூருகின்றேன் என்று கூறி தமது கன்னியுரையினை தவிசாளர் மேனன் நிகழ்த்தினார்.

 

இந்த அமர்வின்போது உறுப்பினர்களினால் பல்வேறு கருத்துகள் தெரிவிக்கப்பட்டதுடன் தவிசாளரினால் மக்கள் நலநன அடிப்படையாக கொண்டு சில தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டு சபையின் அனுமதிகள் வழங்கப்பட்டன.

 

10 வட்டாரங்களைக் கொண்ட போரதீவுப்பற்றுப் பிரதேசத்தில் பட்டியல்வேட்பாளர்கள் அடங்களாக 16 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதில் 8 உறுப்பினர்கள் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பிலும், 5 உறுப்பினர்கள் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பிலும், 3 உறுப்பினர்கள் தேசிய மக்கள் சார்பிலும் தெரிவு செய்யப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05