Header Logo

வடக்கு
யாழில் 330 போதைமாத்திரைகளுடன் ஒருவர் கைது

Jun 10, 2025 - 04:57 PM -

0

யாழில் 330 போதைமாத்திரைகளுடன் ஒருவர் கைது

சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த முஸ்லீம் வர்த்தகர் ஒருவர் இன்று (10) சாவகச்சேரி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி பொலிஸ்நிலையத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப பொலிஸ் பரிசோதகர் மயூரன் தலைமையிலான குழுவினருக்கு கிடைத்த இரகசிய தகவல்களுக்கு அமைவாக சாவகச்சேரி நகர்ப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவர்களில் மூவர் நேற்று (09) இரவு கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை செய்யும் வர்த்தகநிலையத்தை நடத்தும் 45 வயதான முஸ்லீம் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதைமாத்திரைகள் பெற்றுக்கொள்வது தெரியவந்தது.

இன்று குறித்த வர்த்தகர் 330 போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது இவர் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.

அதனை தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்க்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் ஐஸ் போதைக்கு அடிமையானவர் எனவும் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஐஸ் போதைப்பொருளை பெற்று பாவித்துவருவதாக பொலிஸாரிடம் குறிப்பிட்டுள்ளார்.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title