Header Logo

சினிமா
சின்மயி விஷயத்தில் கொந்தளித்த கங்கை அமரன்

Jun 10, 2025 - 06:19 PM -

0

சின்மயி விஷயத்தில் கொந்தளித்த கங்கை அமரன்

தென்னிந்திய சினிமாவை தாண்டி பாலிவுட்டில் பல பாடல்களை பாடி அசத்தி வந்தவர் பின்னணி பாடகி சின்மயி. வைரமுத்துவால் தனக்கு ஏற்பட்ட பிரச்சனையை முன்வைத்த சின்மயியை பாடல் பாடக்கூடாது என்று ரெட் கார்ட் போடப்பட்டது. அதன்பின் தமிழில் பாடாமல் இருந்த சின்மயிக்கு லியோ படத்தில் திரிஷா குரலுக்கு டப் கொடுத்திருந்தார்.

தடைகளை மீறி லோகேஷ் கனகராஜ் இதை செய்திருந்தார். இதனைதொடர்ந்து தக் லைஃப் படத்தில் முத்த மழை பாடலை ஆடியோ லான்ச்சில் ஏ ஆர் ரஹ்மான், சின்மயியை பாட வைத்தார். அவர் பாடியது மிகப்பெரியளவில் டிரெண்டாகிய நிலையில், இணையம் முழுவதும் சின்மயி பற்றிய பேச்சுக்கள் எழுந்தது.

சமீபத்தில் சின்மயிக்கு ஆதவராக இசையமைப்பாளர் கங்கை அமரன் பேட்டியொன்றில் பேசிய விஷயம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதில், சின்மயிக்கு ஒரு ரசிகர்கள் சந்திப்பு நடத்துகிறார்கள் என்று சொன்னதும் நிச்சயம் வருகிறேன் என்று கலந்து கொண்டேன்.

ஏனென்றால் சின்மயி ஒரு பாடகியாக பட்ட கஷ்டம், அதன்பின் நடந்த அசிங்கம், அந்த அசிங்கத்தை வெளியே சொன்னதும் அவர் உத்தமன் மாதிரியும் இவர் குற்றவாளியாக நின்ற அசிங்கமான சூழலில் நாம் நின்றோம். அப்போது அவருக்கு யாரும் உதவி செய்யவில்லை. அநியாயத்தை கேட்க ஒரு பெண் நிற்கிறார், அவருக்கு ஆதரவு கொடுக்க நான் ரெடி.

வைரமுத்து ஒரு தங்கமான ஆள், யாரையும் தப்பா முகத்தை பார்த்து பழகுனது கிடையது.

அப்படிப்பட்ட ஆள் மேல நீ குத்தம் சொல்லலாம். அந்தி மழை பொழிகிறது ஒவ்வொரு துளியிலும் உன் முகம் தெரிகிறது என்று அழகாக எழுதியவர். அவர் எவ்வளவு உத்தமமான ஆள். அவர் ஒரு அதிசயப்பிறவி. அவரைப்பற்றி அவரே சொல்லிக்கொள்வார்.

வைரமுத்து ஒரு நல்ல கவிஞர் என்று உண்மையாக ஒத்துக்கொள்கிறேன், ஆனால் நல்ல மனிதன் இல்லை. வைரமுத்து பற்றி பேசினால் என்னை கைது செய்துவிடுவார்களா? இந்நிகழ்ச்சிக்கு பின் முதல்வர் வீட்டுக்குத்தான் போரேன் என்று கங்கை அமரன் கூறியிருக்கிறார்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

title