Jun 11, 2025 - 10:15 AM -
0
இரத்மலானையில் உள்ள Haleon Sri Lankaவின் உற்பத்தி தொழிற்சாலைக்கு இலங்கைக்கான இங்கிலாந்தின் வர்த்தகத் தூதுவரான எவர்டனின் லோர்ட் ஹனட் விஜயம் செய்தார். இவ்விஜயத்தின் போது, அவருடன் பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் திரு.அன்ட்ரூ பெட்ரிக், தெற்காசியாவின் துணை வர்த்தக ஆணையாளர் Ms.அனா ஷொட்போல்ட், இலங்கைக்கான வர்த்தக பணிப்பாளர் Ms.மாரா வாட்டர்ஸ், வர்த்தகம் மற்றும் முதலீட்டுக்கான துணைத் தலைவர் Ms.அசந்தி பெர்னாண்டோ மற்றும் APAC மற்றும் தெற்காசியாவின் இங்கிலாந்து வர்த்தக தூதுவர் உறவு முகாமையாளர் Ms.ஷமீமா யூசுப் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இந்த விஜயம், புதுமைகளை வளர்ப்பதையும் பொருளாதார வளர்ச்சியை முன்னெடுப்பதையும் நோக்கமாகக் கொண்ட Haleon Sri Lankaவிற்கு அதன் தற்போதைய முன்முயற்சிகள் மற்றும் இலட்சிய எதிர்காலத் திட்டங்களை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்கியது. Haleonஇன் பாரம்பரியம் மற்றும் செயற்பாடுகளை முன்னிலைப்படுத்திய அதன் திரவ மற்றும் மாத்திரை உற்பத்தி வசதிகளை இந்தக் குழு விரிவாகச் சுற்றிப் பார்த்தது. இப்பிரிவு, இலங்கையர்களுக்கு தரமான சுகாதார சேவையை வழங்குவது மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியாக பிற சந்தைகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது.
மனித நேயத்துடன் சிறந்த நாளாந்த ஆரோக்கியத்தை வழங்குவதற்கான Haleonஇன் நீடித்த அர்ப்பணிப்புக்கு இரத்மலானை உற்பத்தி தொழிற்சாலை ஒரு சான்றாக திகழ்கின்றது. Haleon Lankaவின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமைத்துவப் பணிப்பாளர் சானக வன்னியாராச்சி கருத்து தெரிவிக்கையில், 1956 முதல், Haleon உலகளாவிய தரநிலைகளை பூர்த்தி செய்யும் உயர்தர மருந்துகளை வழங்குவதிலும் இலங்கையின் மருந்தாக்கல் பணியாளர்களின் திறன்களை வளர்ப்பதிலும் முதலீடு செய்து வருகிறது.
ஒரு தொழில்துறைத் தலைவராக, அர்த்தமுள்ள வேலைவாய்ப்புக்களை உருவாக்கி, முக்கிய திறன்களை வழங்கி, நாட்டின் சுகாதார சுற்றுச்சூழல் அமைப்பை வலுப்படுத்த உதவியதையிட்டு நாங்கள் பெருமைப்படுகிறோம். எங்கள் முயற்சிகள் ஆரோக்கியமான மற்றும் திறமையான தேசத்தை ஆதரிப்பதோடு, மருந்தாக்கல் தொழில்நுட்பம் மற்றும் சுகாதார புதுமைகளில் இங்கிலாந்து-இலங்கைக்கிடையேயான நீண்டகால கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்துகின்றன.” என்றார்.
இலங்கைக்கான பிரிட்டிஷ் உயர் ஸ்தானிகர் அன்ட்ரூ பெட்ரிக்கின் கருத்து:
“Haleonனின் இரத்மலானை தொழிற்சாலையை பார்வையிட்டதும் இலங்கையின் சுகாதாரத் துறைக்கு அது தொடர்ந்து அளித்து வரும் குறிப்பிடத்தக்க பங்களிப்பைக் கண்டதும் மகிழ்ச்சியாக இருந்தது. இந்த தொழிற்சாலை, இங்கிலாந்து- இலங்கைக்கு இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு கூட்டாண்மையின் வலிமையை பிரதிபலிப்பது மட்டுமன்றி உள்ளூர் திறமைகளை மேம்படுத்தல், புதுமைகளை வளர்த்தல் மற்றும் நிலையான பொருளாதார வளர்ச்சியை ஆதரிப்பதில் நீண்டகால பிரிட்டிஷ் வணிகங்களின் முக்கியத்துவத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
சர்வதேச நுகர்வோர் சுகாதார நிறுவனமான Haleon UKயின் (முன்னர் GlaxoSmithKline Consumer Health) ஒரு பகுதியாக இருக்கும் Haleon Sri Lanka, 1956 முதல் இலங்கையர்களால் பெருமையுடன் நிர்வகிக்கப்பட்டு வருவதுடன் நுகர்வோரின் ஆரோக்கியம் மற்றும் நல்வாழ்வை மேம்படுத்துவதில் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகிறது.
Haleonஇன் பரந்த தயாரிப்புக்களில் உள்ளடங்கும் சென்சோடைன், பனடோல், ENO, அயடெக்ஸ், கோர்சொடில், வோல்டரன் மற்றும் பிரிடன் போன்ற நன்கு அறியப்பட்ட வர்த்தக நாமங்கள், மில்லியன் கணக்கான இலங்கையர்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ உதவுகின்றன. சென்சோடைன் பல் உணர்திறனிலிருந்து பயனுள்ள நிவாரணம் அளித்து தனிநபர்கள் தங்களுக்குப் பிடித்த உணவுகள் மற்றும் பானங்களை அசௌகரியம் இல்லாமல் அனுபவிக்க அனுமதிக்கிறது. பனடோல் விரைவான மற்றும் பயனுள்ள வலி நிவாரணத்தை வழங்கும் அதே நேரத்தில் ENO அமிலத்தன்மை மற்றும் அஜீரணத்திலிருந்து விரைவான நிவாரணத்திற்கு உதவுகிறது. அயடெக்ஸ் தசை வலிக்கு இலக்கு வைக்கப்பட்ட நிவாரணம் அளிக்கிறது. மேலும் கோர்சொடில் பல்ஈறுகளின் ஆரோக்கியத்தை ஆதரிக்கிறது. வோல்டரன் அதன் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. இந்த நம்பகமான வர்த்தக நாமங்கள் ஒன்றாக, சமூகத்தின் ஒட்டுமொத்த நல்வாழ்விற்கும் ஆரோக்கியத்திற்கும் பங்களிக்கின்றன.
Haleon தொடர்பாக:
நுகர்வோர் சுகாதாரத்தில் உலகளாவிய தலைவராக உள்ள Haleon (LSE/NYSE: HLN) மனித நேயத்துடன் சிறந்த நாளாந்த ஆரோக்கியத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. Haleonஇன் தயாரிப்புக்கள் வாய்வழி ஆரோக்கியம், விற்றமின்கள், தாதுக்கள் மற்றும் Supplements (VMS), வலி நிவாரணம், சுவாச ஆரோக்கியம், செரிமான ஆரோக்கியம் மற்றும் தோல் சிகிச்சை ஆரோக்கியம் மற்றும் ஏனையவை என ஆறு முக்கிய பிரிவுகளைக் கொண்டுள்ளது. அதன் நீண்டகால வர்த்தக நாமங்கள் நம்பகமான அறிவியல், புதுமை மற்றும் ஆழமான மனித புரிதலின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளன.

