வணிகம்
வீசா (Visa) தனது ஆசிய பசுபிக் தலைமைத்துவ உச்சி மாநாட்டை முதல்முறையாக இலங்கையில் நடாத்தி, இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிக்கின்றது

Jun 11, 2025 - 10:43 AM -

0

வீசா (Visa) தனது ஆசிய பசுபிக் தலைமைத்துவ உச்சி மாநாட்டை முதல்முறையாக இலங்கையில் நடாத்தி, இலங்கையில் சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிக்கின்றது

சர்வதேச அளவில் கொடுப்பனவுகள் துறையில் முன்னிலை வகித்து வருகின்ற வீசா, நாட்டில் கூட்டங்கள், ஊக்குவிப்புக்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சார்ந்த சுற்றுலாத்துறைக்கு ஆதரவளிப்பதற்காக, வீசா ஆசிய பசுபிக் உச்சி மாநாட்டை இலங்கையில் நடாத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையின் டிஜிட்டல் பரிணாம மாற்றம் மற்றும் பொருளாதார வளர்ச்சி ஆகியவற்றில் வீசா கொண்டுள்ள அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தும் வகையில் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்புப் பணியகத்துடனான புரிந்துணர்வு உடன்படிக்கையைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொழுதுபோக்கு மற்றும் கூட்டங்கள், ஊக்குவிப்புக்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சுற்றுலாத்துறைக்கு மிகவும் பிரபலமான நாடாக இலங்கையை நிலைநிறுத்துவதே இக்கூட்டாண்மையின் நோக்கம். 

ஒத்துழைப்புடனான மற்றும் விரிவான ஒரு அணுகுமுறையினூடாக, வீசாவின் கொடுப்பனவு ஏற்றுக்கொள்ளப்படும் தீர்வுகளுடன் உள்வரும் சுற்றுலாப் பிரயாணத்தை ஊக்குவித்து, சுற்றுலாப் பயணிகள் செலவு செய்வதை மேம்படுத்தி, முக்கியமான சுற்றுலாத்துறை வழித்தடங்களை டிஜிட்டல்மயமாக்கம் செய்யும் பணிகளை இக்கூட்டாண்மை முன்னெடுக்கும். திறன் மேம்பாடு மற்றும் நிதியியல் அறிவூட்டல் நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக, இத்துறையில் பொழுதுபோக்கு மற்றும் கூட்டங்கள், ஊக்குவிப்புக்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் சார்ந்த தொழில் முயற்சிகளுக்கு இது வலுவூட்டும். இந்த கூறுகளை வீசா வடிவமைக்கவுள்ளதுடன், சுற்றுலாத்துறையிலுள்ள பொழுதுபோக்கு மற்றும் கூட்டங்கள், ஊக்குவிப்புக்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் சார்ந்த தொழில் முயற்சிகளுக்கு அடிப்படைத் திறன்களை வழங்குவதற்காக இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்புப் பணியகத்தின் இணையத்தளத்தில் அவை இடம்பெறச் செய்யப்படும். 

வீசாவின், ஆசிய பசுபிக் பிராந்திய தலைமை அதிகாரி ஸ்டீபன் கார்பின் அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “எமது ஆசிய பசுபிக் மற்றும் சர்வதேச வணிக நிகழ்ச்சிநிரலில் முக்கியமானதொரு மூலோபாயச் சந்தையாக இலங்கை காணப்படுகின்றது. 37 ஆண்டுகளுக்கும் மேலாக நாம் இலங்கையில் எமது சேவையை வழங்கி வந்துள்ளோம். சுற்றுலாத்துறையானது இலங்கையின் பொருளாதார வளர்ச்சியின் மையமாகக் காணப்படுவதுடன், இந்த மகத்தான தேசத்தை ஒட்டுமொத்த உலகும் எவ்வாறு அனுபவிக்கின்றது என்பதை மேம்படுத்துவதற்காக இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்புப் பணியகத்துடன் கைகோர்ப்பதையிட்டு நாம் பெருமை கொள்கின்றோம்,” என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “இது குறித்த புரிந்துணர்வு உடன்படிக்கை மற்றும் தற்போது கொழும்பில் இடம்பெறும் எமது தலைமைத்துவ உச்சி மாநாடு ஆகியன எமது நோக்கத்தையும், இலங்கையுடன் அதன் சுற்றுலாத்துறை அபிலாஷைகளை மேம்படுத்துதற்காக கைகோர்த்து, டிஜிட்டலால் முன்னெடுத்துச் செல்லப்படும் பொருளாதாரமாக மாற்றுவதில் எமது இடைவிடாத அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றது,” என்று அவர் தொடர்ந்தும் குறிப்பிட்டார். 

இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்புப் பணியகம் மற்றும் இலங்கை சுற்றுலாத்துறை அதிகார சபை ஆகியவற்றின் தலைவர் புத்திக ஹேவாவசம் அவர்கள் இது குறித்து கருத்து வெளியிடுகையில், “நிதியறிவு, சுற்றுலாத்துறை திறன் மேம்பாடு மற்றும் இலங்கையை பிரபலப்படுத்தும் கூட்டு சந்தைப்படுத்தல் முயற்சிகள் ஆகியவற்றினூடாக பிரயாண அனுபவத்தை மேம்படுத்தும் நோக்குடனான ஒரு ஒத்துழைப்பாக அமைந்துள்ள உலகளாவிய வீசா நிறுவனத்துடனான மூலோபாய கூட்டாண்மை குறித்து அறிவிப்பதில் இலங்கை சுற்றுலாத்துறை ஊக்குவிப்பு பணியகம் மிக்க மகிழ்ச்சி அடைகின்றது,” என்று குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், “சர்வதேச பிரயாணிகள் மத்தியில் ஒரு முன்னணி நாடாக இலங்கை தொடர்ந்தும் நிலைபெற்றிருப்பதை உறுதி செய்து, எமது தேசத்தின் செழுமையான கலாச்சார பாரம்பரியத்தைக் கட்டிக்காத்து, டிஜிட்டல் புத்தாக்கத்தின் மீது நாம் கொண்டுள்ள இடைவிடாத அர்ப்பணிப்பை இம்முயற்சி பிரதிபலிக்கின்றது. கூட்டங்கள், ஊக்குவிப்புக்கள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் (MICE) சார்ந்த சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் வகையில் தனது முதலாவது ஆசிய பசுபிக் தலைமைத்துவ மாநாட்டை இலங்கையில் நடாத்துகின்றமைக்காக வீசாவுக்கு நன்றி தெரிவிப்பதுடன், சர்வதேச சுற்றுலாத்துறையில் இலங்கையின் ஸ்தானத்தை மேலும் வலுப்படுத்துவதில் இக்கூட்டாண்மையின் அனுகூலத்தைப் பயன்படுத்த ஆவலாக உள்ளோம்,” என்று குறிப்பிட்டார். 

தேசிய மட்டத்தில் தொடர்புபட்ட தரப்பினருடன் வீசா பேணி வரும் பரந்த ஒத்துழைப்பிற்கு மற்றுமொரு சான்றாக இக்கூட்டாண்மை மாறியுள்ளது. சுற்றுலாப் பயணிகள் செல்லும் வழித்தடங்கள் எங்கிலும் கொடுப்பனவுகள் ஏற்றுக்கொள்ளப்படுவதற்கு இடமளித்து, பிராந்திய பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகளுக்கு பங்களிப்பதற்காக இலங்கை சுற்றுலாத்துறை அபிவிருத்தி அதிகார சபையுடனும் ஒன்றிணைந்து வீசா பணியாற்றி வருகின்றது. 

இலங்கையில் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதில் தனது அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டியவாறு, தனது ஆசிய பசுபிக் தலைமைத்துவ உச்சி மாநாட்டை தற்சமயம் அது இலங்கையில் நடாத்துவதுடன், இதில் கலந்துகொள்வதற்காக வீசா ஆசிய பசுபிக் சிரேஷ்ட தலைமைத்துவ அதிகாரிகள் ஒட்டுமொத்தமாக கொழும்பிற்கு பயணித்து, மூன்று தினங்களாக இங்கு தங்கியிருப்பர். 

இலங்கையில் சுற்றுலாத்துறையுடன் தொடர்புபட்ட தரப்பினருடன் ஒத்துழைத்து, பொருளாதாரத்தை டிஜிட்டல்மயமாக்குவதை வலுப்படுத்தும் வீசாவின் நோக்கத்தை இந்த உச்சி மாநாடு பிரதிபலிக்கின்றது. இலங்கையில் சுற்றுலாத்துறை சூழல் கட்டமைப்பை மேம்படுத்துவதில் மிக நீண்ட காலமாக வீசா ஒத்துழைத்து வந்துள்ளது. 

சுற்றுலாத்துறை வலயங்களில் டிஜிட்டல் கொடுப்பனவுகள் கைக்கொள்ளப்படுவதை ஊக்குவிப்பதற்காக சுற்றுலாப் பிரயாணிகளை இலக்காகக் கொண்ட செல்வாக்கு செலுத்துனர்கள் தலைமையிலான பிரச்சாரங்கள், வணிகர்களுக்கு அறிவூட்டுதல் மற்றும் வர்த்தகநாம ஊக்குவிப்பு முயற்சிகள் மீது வீசா தொடர்ந்தும் முதலீடுகளை மேற்கொள்ளும். சுற்றுலாத்துறைக்கு அப்பால், தனது அரச துறை தீர்வுகள் தளத்தினூடாக, அரச துறையில் கொடுப்பனவுகளை டிஜிட்டல்மயமாக்கி, அரச சேவைகள் வழங்கப்படுவதை ஊக்குவித்தும், அத்தியாவசிய சேவைகளுக்கு அட்டை மூலமான கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கு அனுசரணையளித்தும், மற்றும் உள்ளூர் வங்கிகளுடனான கூட்டாண்மைகள் மூலமாக டிஜிட்டல் டிக்கெட் முறைமை மற்றும் கட்டண கொடுப்பனவுகளுக்கு இடமளித்தும் உதவியுள்ளது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடன் இணைந்து பணியாற்றும் வீசா, பயன்பாட்டுக் கட்டணக் கொடுப்பனவுகள், அனுமதிப்பத்திரங்களை புதுப்பித்தல், மற்றும் வரிகள் போன்றவற்றுக்கான கொடுப்பனவுகளை வீசா அட்டைகள் மூலமாகச் செலுத்தி, குடிமக்களின் கொடுப்பனவு வழிமுறைகளை சீரமைக்க உதவி வருகின்றது. 

இந்நிகழ்வில் உரையாற்றிய ஸ்டீபன் கார்பின் அவர்கள் கூறுகையில், “டிஜிட்டல் பொருளாதார அமைச்சுடனான எமது மூலோபாயக் கூட்டாண்மையானது இலங்கையின் மின்-ஆட்சி நிர்வாகம் (e-governance) மற்றும் டிஜிட்டல் பரிணாம வளர்ச்சி ஆகியன குறித்த இலக்குகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. வீசா அட்டைகளை உபயோகித்து டிஜிட்டல்மயமாக்கப்பட்ட கொடுப்பனவுகளுடன் பொதுச் சேவைகளை பாதுகாப்பாகவும், சௌகரியமாகவும் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பினை இலங்கை மக்கள் வெளிக்கொண்டு வர முடியும். அனைவரையும் அரவணைக்கும் டிஜிட்டல் பொருளாதாரமாக மாற வேண்டும் என்ற இலங்கையின் குறிக்கோளுக்கு அமைவாக, இது சிறு வணிகங்கள் தம்மை டிஜிட்டல்மயமாக்கிக் கொள்வதற்கு உந்துசக்தியளித்து, மொபைல் பணப்பை ஒருங்கிணைப்பு (mobile wallet integration) மற்றும் எல்லை தாண்டிய கொடுப்பனவுகள் (cross-border payment) போன்ற எதிர்கால புத்தாக்கங்களை கொண்டு வருவதில் முன்னின்று உழைப்போம்,” என்று குறிப்பிட்டார். 

டிஜிட்டல் பொருளாதாரத்திற்கான பிரதி அமைச்சர் கௌரவ பொறியியலாளர் எரங்க வீரரட்ண அவர்கள் வீசா குறித்து கருத்து வெளியிடுகையில், “டிஜிட்டல்ரீதியாக வலுவூட்டப்பட்ட பொருளாதாரத்தை நோக்கிய தனது பயணத்தை இலங்கை விரைவுபடுத்தியுள்ள நிலையில், வீசா போன்ற சர்வதேச முன்னிலை நிறுவனங்களுடனான மூலோபாயக் கூட்டாண்மைகள் எமது குறிக்கோளை அடையப்பெறுவதற்கு முக்கியமான கருவியாக மாறியுள்ளன. அரசாங்கத்தின் டிஜிட்டல் மூலோபாயத்திற்கு வீசா வழங்கும் ஆதரவு, பொதுச் சேவை வழங்கலின் திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது மாத்திரமன்றி, நவீன, பணவடிவற்ற (cashless) சூழல் கட்டமைப்பில் வளம் காண்பதற்கு குடிமக்களுக்கும், சிறு வணிகங்களுக்கும் வலுவூட்டியுள்ளது,” என்று குறிப்பிட்டார். அவர் தொடர்ந்தும் கூறுகையில், “வீசா வழங்கும் பொதுத்துறை தீர்வுகள் தளத்தினூடாக நாம் பொதுத்துறை கொடுப்பனவுகளை டிஜிட்டல்மயப்படுத்தி, குடிமக்கள் பாதுகாப்பாகவும், சௌகரியத்துடனும் அத்தியாவசிய சேவைகளைப் பெற்றுக்கொள்வதை இலகுபடுத்தி, நுண் மற்றும் சிறு தொழில்முயற்சிகள் டிஜிட்டல் கொடுப்பனவுகளை நோக்கிய மாற்றத்தை முன்னெடுக்க அனுசரணையளித்து உதவி, அதன் மூலமாக அவர்களுடைய சந்தை அடைவுமட்டம் மற்றும் நிதியியல் நெகிழ்திறன் ஆகியவற்றை விரிவுபடுத்தி, அனைவரையும் அரவணைக்கும் டிஜிட்டல் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புதற்கு மிகவும் முக்கியமான டிஜிட்டல் அடையாள ஒருங்கிணைப்பு மற்றும் நிகழ்நேர வழங்கல் தீர்வுகளை ஆராய அவர்களுக்கு இடமளிக்க எம்மால் முடியும். 

வீசாவின் உலகளாவிய நிபுணத்துவம் மற்றும் புத்தாக்கத்தின் மீது கொண்டுள்ள அர்ப்பணிப்பு ஆகியன அரச துறையை நவீனமயப்படுத்தல், நிதியியல் ரீதியான அனைவரையும் அரவணைத்தல், அல்லது டிஜிட்டல் உட்கட்டமைப்பு மேம்பாடு என எமது தேசிய முன்னுரிமைகளுடன் இடைவிடாது ஒன்றியுள்ளது,” என்று குறிப்பிட்டார். மேலும், இலங்கையில் நிதியியல் ரீதியாக அனைவரும் அரவணைக்கப்படுவதை ஊக்குவிப்பதற்காக, இலங்கை வர்த்தக சம்மேளனத்துடன் (Ceylon Chamber of Commerce) இணைந்து இளம் தொழில்முயற்சியாளர்களுக்கான SPARK நிகழ்ச்சித்திட்டம், மொனராகலையில் பெண்கள் தலைமையிலான சிறிய முதல் நடுத்தர அளவு வரையான வணிகங்களுக்கான நிதி அறிவை வளர்க்கும் செயலமர்வுகள், மற்றும் SOS Children’s Villages மற்றும் BCS Sri Lanka ஆகியவற்றுடன் தொழில்நுட்பக் கல்வி முயற்சிகள் போன்ற நிகழ்ச்சித்திட்டங்கள் மூலமாக, இளைஞர் மற்றும் பெண்கள் தலைமையிலான நுண், சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் முயற்சிகள் மீது வீசா முதலீடு செய்துள்ளது. நாட்டில் தனது வங்கிக் கூட்டாளர்களுடன் ஒன்றிணைந்து, தொடுகையின்றிய கொடுப்பனவுகள் (contactless payment), அணியக்கூடியவை (wearables) மற்றும் செயற்கை நுண்ணறிவால் முன்னெடுக்கப்படும் இணையப்பாதுகாப்பு கருவிகள் (AI-driven cybersecurity tool) போன்ற புத்தாக்கங்களையும் வீசா அறிமுகப்படுத்தியுள்ளது. 

வீசா (Visa Inc.) குறித்த விபரங்கள் 

டிஜிட்டல் கொடுப்பனவுகளில் உலகளாவில் முன்னிலை வகித்து வருகின்ற Visa (NYSE: V), 200 க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிராந்தியங்களில் நுகர்வோர், வணிகர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் அரச ஸ்தாபனங்கள் ஆகியவற்றுக்கிடையில் கொடுக்கல்வாங்கல் நடவடிக்கைகளுக்கு அனுசரணையளித்து வருகின்றது. தனிநபர்களும், வணிகங்களும், மற்றும் பொருளாதாரங்களும் வளம் காண்பதற்கு இடமளிக்கின்ற புத்தாக்கம்மிக்க, சௌகரியமான, நம்பகமான, மற்றும் பாதுகாப்பான கொடுப்பனவுகள் வலையமைப்பினூடாக உலகினை ஒன்றிணைப்பதே எமது நோக்கம். எங்கேயும், எல்லோரையும் அரவணைத்து உள்ளடக்கும் பொருளாதாரங்கள், எங்கேயும், எல்லோரையும் மேம்படுத்தும் என்றும், பண இயக்கத்தின் எதிர்காலத்திற்கான அணுகலுக்கு அத்திவாரமாக அமையும் என்றும் நாங்கள் நம்புகிறோம். மேலும் தகவல் விபரங்களுக்கு Visa.com .

Comments
0

MOST READ
01
02
03
04
05