வணிகம்
2024/25 நிதியாண்டில் First Capital சந்தை முன்னோடியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

Jun 11, 2025 - 10:59 AM -

0

2024/25 நிதியாண்டில் First Capital சந்தை முன்னோடியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு

முன்னணி நிதிசார் தீர்வுகள் வழங்குனரான First Capital Holdings PLC (குழுமம்), 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் மொத்தப் பரந்த வருமானமாக ரூ. 5.0 பில்லியனை பதிவு செய்துள்ளது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 10.1 பில்லியனாக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வட்டி வீதங்கள் பெருமளவில் வீழ்ச்சியடைந்தமை மற்றும் உள்நாட்டு கடன் மறுசீரமைப்புகள் மற்றும் கொள்கை வட்டி வீதங்களில் வீழ்ச்சி போன்ற காரணங்களால், முன்னைய நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், முடிவடைந்த ஆண்டில் பெறுமதி வீழ்ச்சியடைந்திருந்தது. 

எவ்வாறாயினும், நிதியாண்டின் பின்னைய காலகட்டத்தில், வட்டி வீதங்களில் குறிப்பிடத்தக்களவு வீழ்ச்சி அவதானிக்கப்பட்டதுடன், அதனால் கடன் பத்திரங்களுக்கும் பங்குப் பத்திரங்களுக்கும் சாதகமான சந்தை நிலை ஏற்படுத்தப்பட்டிருந்தது. அதற்கமைய, முதன்மை விற்பனையாளர் பிரிவு மற்றும் கூட்டாண்மை பங்கு கையாளல் பிரிவு மற்றும் ஆலோசனை பிரிவு போன்றன குழுமத்தின் வர்த்தக வருமானத்தில் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கியிருந்தன. 

2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டின் பிரதான நிதிசார் சாராம்சங்கள்: 

குழுமத்தின் முதன்மை விற்பனையாளர் பிரிவான First Capital Treasuries PLC, 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 3.0 பில்லியனை பதிவு செய்திருந்தது. (2023/24 காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 11.1 பில்.). இந்தப் பெறுபேறுகளில், அரசாங்க கடன் பத்திரங்கள் விற்பனையினூடாக கிடைத்த வருமதி ரூ. 3.0 பில்லியனாகவும், தேறிய வட்டி வருமானம் ரூ. 1.6 பில்லியனாகவும் பதிவாகியிருந்தன. (2023/24 காலப்பகுதிக்கான வர்த்தக வருமதி ரூ. 15.8 பில். மற்றும் தேறிய வட்டி வருமானம் ரூ. 3.2 பில்.). கூட்டாண்மை பங்குகள் கையாளல் மற்றும் ஆலோசனைப் பிரிவு 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், ரூ. 2.2 பில்லியனை வரிக்குப் பிந்திய இலாபமாக பதிவு செய்திருந்தது. 

(2023/24 காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 215 மில்.). பிரிவின் பங்குப் பிரிவு இந்த இலாபத்தில் பெருமளவு பங்களிப்பை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. வெல்த் மனேஜ்மன்ட் பிரிவு, 2025 மார்ச் 31ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில், ரூ. 106 மில்லியனை வரிக்குப் பிந்திய இலாபமாக (2023/24 காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 6 மில்.) பதிவு செய்திருந்தது. நிர்வாகப் பிரிவின் கீழ் காணப்பட்ட சொத்துக்களின் பெறுமதி 2025 மார்ச் 31 ஆம் திகதியன்று, ரூ. 112 பில்லியனாக காணப்பட்டது. (2024 மார்ச் 31 இல் – ரூ. 94 பில்லியன்). 

2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த ஆண்டில் பங்கு முகவர் பிரிவு வரிக்குப் பிந்திய இலாபமாக ரூ. 70 மில்லியனை பதிவு செய்திருந்தது. (2023/24 காலப்பகுதிக்கான வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 8 மில்.). 

2025 மார்ச் மாதத்தில், 2024/25 நிதியாண்டு காலப்பகுதிக்காக பங்கொன்றுக்கு ரூ. 7.50 வீதம், ரூ. 3 பில்லியன் பெறுமதியான இடைக்கால பங்கிலாபத்தை நிறுவனத்தின் பணிப்பாளர் சபை அங்கத்தவர்கள் பிரகடனம் செய்திருந்தனர். 

First Capital Holdings PLC இன் முகாமைத்துவ பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி தில்ஷான் வீரசேகர கருத்துத் தெரிவிக்கையில், “சந்தைக்கு நாம் துலங்கலை வெளிப்படுத்துவது மாத்திரமன்றி – அதனை நாம் சீரமைக்கின்றோம். தெளிவுத்தன்மையுடன் தலைமை வகிப்பது, நுணுக்கமாக பின்பற்றல் மற்றும் நம்பிக்கையுடன் சேவைகளை வழங்கல் ஆகியவற்றில் எமது ஆற்றலை பிரதிபலிக்கும் வகையில் இந்த ஆண்டின் நிதிப் பெறுபேறுகள் அமைந்துள்ளன. அரசாங்க கடன் பத்திரங்கள் பிரிவில் First Capital Treasuries PLC தொடர்ச்சியாக தனது ஆதிக்கத்தை வெளிப்படுத்தியிருந்தது. அத்துடன், எமது ஆலோசனை சேவை, வெல்த் மற்றும் முகவர் வியாபாரங்களும் உறுதியான பங்களிப்புகளை வழங்கியிருந்தன. எமது ஒன்றிணைக்கப்பட்ட மாதிரியின் வலிமைக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. வளர்ச்சியை முன்னெடுப்பது, மீட்சியை கட்டியெழுப்புவது மற்றும் எமது பங்காளர்களுக்கு தொடர்ச்சியான பெறுமதியை ஏற்படுத்திக் கொடுப்பது ஆகியவற்றுக்கான சிறந்த எடுத்துக்காட்டாக இது அமைந்துள்ளது. என்றார். 

2024/25 காலப்பகுதியில் பல பெருமைக்குரிய கௌரவிப்புகளையும் First Capital பெற்றிருந்தது. அதனூடாக, நிதிச் சேவைகள் துறையில் தனது தலைமைத்துவத்தை உறுதி செய்திருந்தது. SLIM வர்த்தக நாமச் சிறப்பு விருதுகள் 2024 இல், ஆண்டின் சிறந்த வர்த்தக நாமம் எனும் உயர் கௌரவிப்பை First Capital Holdings பெற்றிருந்தது. அத்துடன், ஆண்டின் சிறந்த சேவை வர்த்தக நாமம் மற்றும் மேலும் இரு கௌரவிப்புகளையும் பெற்றுக் கொண்டது. மேலும், 2024/25 காலப்பகுதிக்கான Business Today TOP 40 தரப்படுத்தல்களில், First Capital Holdings PLC மற்றும் First Capital Treasuries PLC ஆகியன முறையே 20 மற்றும் 21 ஆகிய ஸ்தானங்களில் தரப்படுத்தப்பட்டிருந்தன. 2024/25 முதல் அயைாண்டு காலப்பகுதியில், நிறுவனத்தின் அதிசிறந்த வினைத்திறன் மற்றும் இலங்கையின் நிதிக் கட்டமைப்புக்கான முக்கிய தாக்கம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் இந்த கௌரவம் அமைந்திருந்தது. மேலும், CA ஸ்ரீ லங்கா ஏற்பாடு செய்திருந்த TAGS விருதுகள் 2024 இல், First Capital Holdings PLC, First Capital Treasuries PLC, மற்றும் First Capital Money Market Fund (நம்பிக்கை அலகு) ஆகியன மொத்தமான ஐந்து விருதுகளை சுவீகரித்திருந்தன. இதில், இரண்டு தங்க விருதுகளும் அடங்கியிருந்தன. CMA ஒன்றிணைக்கப்பட்ட அறிக்கையிடல் விருதுகள் 2024 இலும் நிறுவனம் கௌரவிப்பைப் பெற்றிருந்ததனூடாக, தொழிற்துறையில் தனது தலைமைத்துவத்தை மேலும் உறுதி செய்திருந்தது. British Computer Society (BCS), the Chartered Institute for IT Sri Lanka Section (BCSSL) ஏற்பாடு செய்திருந்த தேசிய ICT விருதுகள் 2024 (NBQSA) இல், இலங்கையின் முதலாவது நம்பிக்கை அலகுகள் பரிவர்த்தனைகளை WhatsApp ஊடாக மேற்கொள்ளும் கட்டமைப்பான First Capital Invest WhatsApp Channel க்கு, In-House Development பிரிவில் தங்க விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டிருந்தது. தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாகவும், இலங்கையில் பணியாற்றுவதற்கு சிறந்த நிறுவனங்களில் ஒன்றாக கௌரவிக்கப்பட்டிருந்தது. நேர்த்தியான பணியிட கலாசாரத்தை ஊக்குவிப்பதில் காண்பிக்கும் அர்ப்பணிப்பு இதனூடாக வெளிப்படுத்தப்பட்டிருந்தது.

Comments
0

MOST READ
01
02
03
04
05