Jun 11, 2025 - 11:08 AM -
0
2025 முதல் காலாண்டில் SLT-MOBITEL குறிப்பிடத்தக்களவு நிதிசார் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. குழுமத்தின் வரிக்கு பிந்திய இலாபம் ரூ. 2001 மில்லியனாக பதிவாகியிருந்தது. 2024 முதல் காலாண்டில் பதிவாகியிருந்த ரூ. 156 மில்லியனுடன் ஒப்பிடுகையில் குறிப்பிடத்தக்களவு வளர்ச்சியாகும். இந்தப் பெறுபேற்றினூடாக நிறுவனத்தின் செயற்பாட்டு ரீதியான வளர்ச்சி வெளிப்படுத்தப்பட்டுள்ளமை மட்டுமன்றி, இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வழிநடத்தும் அதன் பங்கை மீள உறுதி செய்வதாகவும் அமைந்துள்ளது.
SLT-MOBITEL இன் தவிசாளர் கலாநிதி. மோதிலால் டி சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “இது சாதாரண நிதிசார் வளர்ச்சி நிலை என்பதற்கு அப்பாற்பட்டது. இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தின் வளர்ச்சி மற்றும் அதன் இன்றியமையா நிலையை மீள உறுதி செய்வதாக அமைந்துள்ளது.” என்றார்.
நிறுவனத்தின் இரு பிரதான வியாபார அலகுகளின் உறுதியான பங்களிப்பு குழுமத்தின் நிதி வளர்ச்சியில் முக்கிய பங்காற்றியிருந்தன. SLT PLC இன் வரிக்கு பிந்திய இலாபம் 369.9% இனால் அதிகரித்து ரூ. 1344 மில்லியனாக பதிவாகியிருந்தது. வரிக்கு முந்திய இலாபமும் 60.3% உயர்வை பதிவு செய்திருந்தது. நிறுவனம், சிறிய நடுத்தரளவு தொழில்முயற்சியாண்மைகள் மற்றும் புரோட்பான்ட் பிரிவுகளின் வருமான வளர்ச்சி முக்கிய பங்காற்றியிருந்ததுடன், நேர்த்தியான செலவு முகாமைத்துவம் மற்றும் செயற்பாட்டு வினைத்திறன் ஆகியவற்றை பிரதிபலித்திருந்தது.
அதேவேளை, Mobitel (SLT-MOBITEL மொபைல்) சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தது. வருமானம் ரூ. 11.8 பில்லியனாக பதிவாகியிருந்தது. மொபைல் டேட்டா சேவைகளின் கேள்வி பெருமளவில் அதிகரித்திருந்தது. அதன் EBITDA பெறுமதி 28.5% அதிகரித்ததுடன், EBITDA வீதப் பெறுமதி 30% உயர்வையும், தொழிற்படு இலாபம் 392% உயர்வையும் பதிவு செய்து, 2024 முதல் காலாண்டில் பதிவு செய்திருந்த தேறிய நட்டத்திலிருந்து முற்றிலும் திருப்பத்தை ஏற்படுத்தி ரூ. 477 மில்லியனை தேறிய இலாபமாக பதிவு செய்திருந்தது. SLT-MOBITEL மொபைல் 2024 ஆம் ஆண்டின் இலங்கையின் வேகமான 4G வலையமைப்பாக, Ookla® இனால் கௌரவிக்கப்பட்டிருந்தமை, மொபைல் சேவை வழங்குனர்களில் அதன் தலைமைத்துவத்தை மேலும் உறுதி செய்திருந்தது.
அரசுடைமை பங்குகளை விற்பதற்கு அடையாளப்படுத்தப்பட்டிருந்த நிலையில், SLT-MOBITEL ஆனது, தற்போது மீள்புத்துணர்வுடன் திகழ்வதுடன், நாட்டின் டிஜிட்டல் மாற்றியமைப்பு நிகழ்ச்சி நிரலின் மையமாக அமைந்திருப்பதுடன், அரசாங்கத்தின் முக்கியமான தேசிய சொத்தாக பாதுகாக்கப்பட்டுள்ளது. நிறுவனத்தின் மீள் வளர்ச்சி என்பது, தந்திரோபாய தலைமைத்துவம் எவ்வாறு செயலாற்றுகின்றது, செயற்பாட்டு வினைத்திறன் மற்றும் பங்காளர் ஒருங்கிணைப்பினூடாக தேசிய பெறுமதியை சேர்ப்பது என்பவற்றை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.
நிதிசார் வளர்ச்சியின் பின்னால் காணப்படும் கூட்டு முயற்சி
நிறுவனத்தின் கட்டமைப்பில் முன்னெடுக்கப்பட்ட கூட்டு முயற்சிகளின் பெறுபேறாக குழுமத்தின் வெற்றிகரமான செயற்பாட்டுகள் அமைந்திருந்தன.
நிறுவன செயற்பாட்டின் முக்கிய அங்கமாக அமைந்திருக்கும் SLT-MOBITEL இன் ஊழியர்கள் – பொறியியலாளர்கள், தொழினுட்பவியலாளர்கள், வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் மற்றும் இதர சேவைகளை வழங்கும் ஊழியர்கள், இந்த மாற்றத்துக்கு முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். புதிய தொழினுட்பங்களை பின்பற்றக்கூடிய ஊழியர்களின் ஆற்றல் மற்றும் சேவைத் தடங்கல் இன்றி தொடர்ச்சித் தன்மையை பேணும் திறன் போன்றன, மேம்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் அனுபவங்களை ஏற்படுத்திக் கொடுப்பதில் முக்கிய பங்காற்றியிருந்தன. புரோட்பான்ட் சேவையை விரிவாக்கம் செய்வது முதல் நிறுவனசார் வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிப்பது வரை, குழுமத்தின் வளர்ச்சியில் அவர்களின் பங்களிப்புகள் உறுதியான அடித்தளத்தை வழங்குவதாக அமைந்திருந்தன.
இந்த மாற்றப் பயணத்தில் நிறுவனத்தை வழிநடத்தில் செல்வதில் பணிப்பாளர் சபை அங்கத்தவர்களும் முக்கியும் பங்காற்றியிருந்தனர். நீண்ட கால நிலைபேறாண்மையில் கவனம் செலுத்தி, பணிப்பாளர் சபை மறுசீரமைப்புகளை முன்னெடுத்திருந்ததுடன், டிஜிட்டல் உட்கட்டமைப்பு முதலீடுகளுக்கு முன்னுரிமை வழங்கியிருந்ததுடன், தேசிய முன்னுரிமைகளுடன் நிறுவனத்தின் வளர்ச்சியும் பொருந்தும் வகையில் அமைந்திருப்பதை உறுதி செய்திருந்தது. மூலோபாய நோக்கினூடாக, குழுமத்தை புத்தாக்கத்தை நோக்கி செல்ல உதவியிருந்ததுடன், நிதிசார் ஒழுக்கத்தைப் பேணவும் உதவியிருந்தது.
SLT-MOBITEL இன் தொழினுட்ப பங்காளர்களும் இந்த வெற்றிகரமான செயற்பாட்டில் முக்கிய பங்களிப்பை வழங்கியிருந்தனர். சர்வதேச மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களுடனான கைகோர்ப்புகளினூடாக, AI-இனால் வழிநடத்தப்படும் தீர்வுகளை நிறுவுவது துரிதப்படுத்தப்பட்டிருந்ததுடன், cloud கட்டமைப்புகள் மற்றும் அடுத்த தலைமுறை இணைப்புத்திறனும் உறுதி செய்யப்பட்டிருந்தன. இந்தப் கூட்டிணைப்புகளினூடாக, உலகத் தரம் வாய்ந்த சேவைகளை பெற்றுக் கொடுக்கும் நிறுவனத்தின் உறுதி மொழியை தொடர்ந்தும் பேண பங்களிப்பு வழங்கப்பட்டிருந்தது.
இந்தக் கட்டமைப்பில் வாடிக்கையாளர்கள் – மில்லியன் கணக்கான இலங்கையர்கள் SLT- MOBITEL இன் மீது காண்பிக்கும் நம்பிக்கையும் முக்கிய அங்கமாக அமைந்திருந்தது. அவர்களின் நிறுவனசார் விசுவாசம் மற்றும் வாடிக்கையாளர் கருத்தளிப்புகளினூடாக, நிறுவனத்தின் சேவை புரட்சியை மொபைல் டேட்டா என்பதிலிருந்து நிறுவனசார் இணைப்புத்திறன் வரை மேம்படுத்த முடிந்தது.
தவிசாளர் கலாநிதி. சில்வா மேலும் குறிப்பிடுகையில், “இந்த வெற்றிகரமான செயற்பாட்டுக்கு நாம் அனைவரும் காரணம். தினசரி அர்ப்பணிப்புடன் செயலாற்றும் ஊழியர்கள், எமது தூர நோக்குடைய பணிப்பாளர் சபை, எமது தொழினுட்ப பங்காளர்கள் மற்றும் எம்மீது நம்பிக்கை கொண்டுள்ள வாடிக்கையாளர்கள் என அனைவருக்கும் நன்றி தெரிவிக்கிறேன். உங்களின் கூட்டு பலம் என்பது, SLT-MOBITEL இன் பயணத்தை முன்னெடுத்துச் செல்ல உதவுகிறது.” என்றார்.
எதிர்கால திட்டம்: நோக்கத்துடனான புத்தாக்கம்
முதல் காலாண்டில் உறுதியான அடித்தளத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், SLT-MOBITEL தற்போது அதன் முதலீடுகளை மாற்றியமைப்பு தொழினுட்பங்களில் துரிதப்படுத்திய வண்ணமுள்ளது. குழுமம் தனது ஃபைபர் மற்றும் 5G உட்கட்டமைப்புகளை விரிவாக்கம் செய்வதுடன், AI இனால் செயற்படுத்தப்பட்ட வாடிக்கையாளர் தீர்வுகளை அடைய எண்ணியுள்ளது. அத்துடன் அதிகரித்துச் செல்லும் வாடிக்கையாளர்கள் தேவைகளை நிவர்த்தி செய்யும் வகையில் புதிய டிஜிட்டல் சேவைகளை அறிமுகம் செய்வதிலும் கவனம் செலுத்துகிறது.
தவிசாளர் கலாநிதி. சில்வா மேலும் குறிப்பிடுகையில், “உலகத் தரம் வாய்ந்த இணைப்புத்திறனை இலங்கை கொண்டிருக்க வேண்டும். SLT-MOBITEL உயர்ந்த ஸ்தானத்தில் திகழும் எதிர்காலத்தை நாம் கட்டியெழுப்பிய வண்ணமுள்ளோம் – தொலைபேசி சேவை வழங்குனர் என்பதாக மட்டுமன்றி, தேசிய முன்னேற்றத்தின் அடையாளமாகவும் திகழ்கிறோம்.” என்றார்.
நிறுவனத்தின் எதிர்கால செயற்பாட்டு வினைத்திறன் தெளிவானதாக அமைந்துள்ளது - SLT- MOBITEL வளர்ச்சியடைவது மட்டுமன்றி, நோக்கம், வினைத்திறன் மற்றும் பயணத்தின் முக்கிய கட்டத்தில் நபர்களைக் கொண்டு எதிர்காலத்தை மாற்றியமைத்த வண்ணமுள்ளது.

