வணிகம்
கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன நகர புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்காக முதல்முறையாக ‘SMART CITY IDEATHON’ செயலமர்வை நடாத்தியுள்ளன

Jun 11, 2025 - 11:17 AM -

0

கொழும்பு துறைமுக நகரம் மற்றும் மொரட்டுவை பல்கலைக்கழகம் ஆகியன நகர புத்தாக்கத்தை மேம்படுத்துவதற்காக முதல்முறையாக ‘SMART CITY IDEATHON’ செயலமர்வை நடாத்தியுள்ளன

கொழும்பு துறைமுக நகரமும், மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நகர மற்றும் நாடு திட்டமிடல் கற்கைபீடமும் ஒன்றிணைந்து “Smart City Ideathon: Innovate, Plan, and Transform Urban Futures of Port City Colombo” என்ற அங்குரார்ப்பண செயலமர்வை ஆரம்பித்துள்ளன. Sales Gallery ல் நடாத்தப்பட்ட இந்த முன்னோடி முயற்சியானது இலங்கையின் முதலாவது வெளிநாட்டு நாணயப் பாவனை கொண்ட விசேட பொருளாதார வலயமான கொழும்பு துறைமுக நகரத்தில் நகர திட்டமிடல், வடிவமைப்பு, மற்றும் அபிவிருத்தி குறித்த புத்தாக்கம் மற்றும் நடைமுறை ரீதியான அணுகுமுறைகளை ஆராய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. 

மொரட்டுவை பல்கலைக்கழகத்தில் நகர தகவலியல் மற்றும் திட்டமிடல் துறையில் கலைமாணி பட்டப்படிப்பை மேற்கொண்டு வருகின்ற மாணவர்களுக்காக இது விசேடமாக தயார் செய்யப்பட்டு, கல்வித்துறை மற்றும் தொழில்துறை ஆகியவற்றிற்கு இடையிலான கூட்டு முயற்சியின் பலனைப் பெற்றுக்கொள்ளும் வகையில் ‘Smart City Ideathon’ என்ற மூன்று கட்ட செயலமர்வு நிகழ்ச்சித்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. விமர்சன சிந்தனையைத் தூண்டி, புதிய கண்ணோட்டங்களை வரவேற்று, மற்றும் துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை வளர்த்து, நகர வாழ்க்கைமுறையின் எதிர்காலத்தை ஆராய்வதற்கு இளம் சிந்தனையாளர்களுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு தனித்துவமான மேடையாக Smart City Ideathon காணப்படுகின்றது. 

முழுமையான தொழிற்பாடுகளைக் கொண்ட திறன் நகரமாக கொழும்பு துறைமுக நகரம் பரிணாம வளர்ச்சி கண்டு வரும் சமயத்தில், நகர அனுபவத்திற்கு மீள்வரைவிலக்கணம் வகுத்து, மேம்படுத்தும் வாய்ப்புக்கள் குறித்த புத்தாக்கமான கோட்பாடுகளை வெளிக்கொண்டு வருமாறு இதில் பங்குபற்றியவர்கள் ஊக்குவிக்கப்பட்டனர். 

“கொழும்பு துறைமுக நகரமானது வெறுமனே ஒரு பௌதிக இடமாக மாத்திரமன்றி, நகர்ப்புற வாழ்வின் எதிர்காலம்: அறிவாற்றல், தகவமைப்பு மற்றும் மனித மையப்படுத்தப்படல் ஆகியவற்றுக்கான வலுவான மாதிரியாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது,” என்று CHEC Port City Colombo (Pvt) Ltd நிறுவனத்தின் நகர்ப்புற திட்டமிடலுக்கான முகாமையாளர் ஜெயதாரணி செந்தூரன் அவர்கள் குறிப்பிட்டார். “Smart City Ideathon போன்ற முயற்சிகள் மூலமாக நகர்ப்புற புத்தாக்குனர்களின் அடுத்த தலைமுறையை நாம் வளர்த்தெடுப்பதுடன், சர்வதேசரீதியாக போட்டித்திறன் கொண்டதாகவும் மற்றும் உள்நாட்டிற்கு ஏற்றதாகவும் நகரங்களை வடிவமைத்து, ஆக்குவதற்கு அவர்களுக்கு வலுவூட்டுகின்றோம். கருவிகள் மற்றும் முன்னின்று உழைப்பதற்கான வாய்ப்புக்கள் ஆகியவற்றை வழங்கி, நகரங்கள் எவ்வாறு சிந்தித்து, தொடர்புபட்டு, மற்றும் வளர்ச்சி காண்கின்றன என்பதற்கு மீள்வரைவிலக்கணம் வகுப்பதற்கு இளம் சிந்தனையாளர்களுக்கு நாம் உதவுகின்றோம்,” என்று குறிப்பிட்டார். 

100 க்கும் மேற்பட்ட மாணவர்கள் முதற்சுற்றில் பங்குபற்றியுள்ள செயலமர்வானது கொழும்பு துறைமுக நகரத்தின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதுடன், இச்செயற்திட்டத்தின் அபிவிருத்தித் திட்டம், மூலோபாய நோக்கங்கள், சூழல் நிலைபேற்றியல் சார்ந்த முயற்சிகள், வரலாற்று முக்கியத்துவம் மிக்க விசேட பொருளாதார வலயத்தை அடிப்படையாகக் கொண்ட முற்போக்கான ஒழுங்குமுறை கட்டமைப்பு ஆகியன குறித்த விரிவான கண்ணோட்டத்தை அவர்கள் வழங்கினர். 

“கல்வித்துறைக்கும், தொழில்துறைக்கும் இடையில் அர்த்தமுள்ள ஒத்துழைப்பின் வலிமையை இச்செயலமர்வு நமக்கு எடுத்துக்காட்டுவதுடன், பகிரப்பட்ட அறிவால் எவ்வாறு நிஜ உலகில் நல்விளைவை முன்னெடுத்துச் செல்ல முடியும் என்பதையும் காண்பிக்கின்றது,” என்று மொரட்டுவை பல்கலைக்கழகத்தின் நகர மற்றும் நாடு திட்டமிடல் கற்கைபீடத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அமில புத்திக ஜெயசிங்க அவர்கள் குறிப்பிட்டார். “Smart City Ideathon போன்ற முயற்சிகள் மூலமாக, எதிர்கால நகரங்களுக்கு அர்த்தமுள்ள பங்களிப்புக்களை வழங்கும் கருவிகள், மேடை, மற்றும் தன்னம்பிக்கையை எமது மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர். தனது இலட்சியம் மற்றும் பரிமாணம் ஆகியவற்றுடன், எதிர்வரும் தசாப்தத்தில் நகர்ப்புற வாழ்வின் எதிர்காலத்தை கற்பனை செய்வதற்கு, இந்த இளம் சிந்தனையாளர்களை வளர்ப்பதற்கான உகந்த சூழலை கொழும்பு துறைமுக நகரம் அவர்களுக்கு வழங்குகின்றது,” என்று மேலும் குறிப்பிட்டார். 

அடுத்த கட்டங்கள் 2025 ஜுன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் திட்டமிடப்பட்டுள்ளதுடன், நிஜ உலகின் சவால்களுக்கு தீர்வு காணும் வகையில் நகர்புற தீர்வுகளுக்கான கருத்தியல் கோட்பாடுகளை மாணவர் அணிகள் வெளிக்கொண்டு வரவுள்ளதுடன், கொழும்பு துறைமுக நகரத்தின் வாழக்கூடிய தன்மை மற்றும் செயல்பாடு ஆகியவற்றையும் மேம்படுத்த உதவுவதைக் காண முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

கொழும்பு துறைமுக நகரம் வழங்கும் கவர்ச்சியான முதலீட்டு வாய்ப்புக்கள் குறித்த கூடுதல் தகவல் விபரங்களை அறிந்து கொள்ள, www.portcitycolombo.lk என்ற இணையத்தளத்தை தயவு செய்து பாருங்கள். ஒற்றை வழி முதலீட்டு அனுசரணை மற்றும் ஒழுங்குமுறை விவகாரங்கள் குறித்த விபரங்களுக்கு www.portcitycolombo.gov.lk என்ற இணையத்தளத்தை தயவு செய்து பாருங்கள்.

Comments
0

MOST READ
01
02
03
04
05