Jun 11, 2025 - 11:22 AM -
0
NDB வங்கியானதும் நாடளாவிய ரீதியில் தெங்கு பயிர்ச்செய்கை மற்றும் ஒருங்கிணைந்த விவசாய முறைமை களை மேம்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மாற்றத்திற்குரிய நிதியியல் தீர்வான கப்ருக அயோஜன கடன் திட்டத்திற்காக தென்னை பயிர்ச்செய்கை சபையுடன் (CCB) தனது பங்குடைமையை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. NDB வங்கியின் இந்த மூலோபாய முயற்சியானது நாட்டின் விவசாயத் துறையை ஆதரிப்பதற்கும், உள்ளூர் விவசாயிகளை தேசிய பொருளாதார வளர்ச்சிக்கு முக்கிய பங்களிப்பாளர்களாக மாற்றுவதற்குமான அதன் திடமான அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகிறது.
இலங்கையின் தெங்கு தொழில்துறையானது உள்நாட்டு வாழ்வாதாரம் மற்றும் ஏற்றுமதி வருமானம் ஈட்டுதல் ஆகிய இரண்டிலும் பிரதான பங்கினை வகிக்கிறது. இந்தத் துறையில் அதிகரித்த உற்பத்தி மற்றும் நிலையான வளர்ச்சிக்கான வளர்ந்து வரும் தேவைக்கு பதிலளிக்கும் விதமாக, புதியதென்னந் தோப்புகளை பயிரிடுவதற்கும், இருக்கும் நிலங்களை புத்துயிர் பெறச்செய்வதற்கும் , நவீன, உற்பத்தித் திறன் கொண்ட விவசாய நடைமுறைகளைப் பின்பற்றுவதற்கும் தேவையான நிதியியல் வளங்களை விவசாயிகளுக்கு வழங்குவதற்காக கப்ருக அயோஜன கடன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் கீழ், தகுதியுள்ள விவசாயிகள் 8% என்ற மிகவும் சலுகையான வருடாந்த வட்டி விகிதத்தில் ரூ. 7 மில்லியன் வரையிலான கடன் வசதிகளை 12 மாதங்கள் வரையிலான சலுகைக் காலத்துடன் 5 ஆண்டுகள் வரை மீளச் செலுத்தும் கால அவகாசத்துடன்பெற முடியும்.இந்த முயற்சித்திட்டமானது வெறும் கடன்வசதியாக மட்டுமல்லாது விவசாயம், கிராமப்புறஅபிவிருத்தி மற்றும் பொருளாதார ஸ்திரத்தன்மை ஆகியவற்றின் எதிர்காலத்திற்கான ஒரு நீண்டகால முதலீடாகும்.
கப்ருக அயோஜன கடன் திட்டமானது பல்வேறு வகையான செயற்பாடுகளுக்கு நிதியுதவியினை வழங்குகிறது:
- புதிய தென்னங்கன்றுகளை நடுதல் மற்றும் ஊடுபயிர்ச்செய்கையுடன் நடவு செய்தல்
- மண் மற்றும் ஈரப்பத பாதுகாப்பு
- உரமிடுதல், தழைக்கூளம் மற்றும் பயிர் பாதுகாப்பு
- விவசாய கிணறுகள் மற்றும் நீர்ப்பாசன முறைமைகளை நிறுவுதல்
- கால்நடைகள் மற்றும் உபகரணங்கள் உள்ளிட்ட தென்னை சார்ந்த ஒருங்கிணைந்த விவசாய முறைமைகள்
- நாற்றுப்பண்ணை மற்றும் விவசாய இயந்திரங்களை வழங்குதல்
- சாத்தியமான பாரிய அளவிலான தென்னை விவசாய திட்டங்கள் (தொழில்நுட்ப மதிப்பீட்டிற்கு உட்பட்டது)
இந்த முயற்சி தொடர்பாக SME, நடுத்தர சந்தைகள் மற்றும் வர்த்தக வங்கியியல் பிரிவின் துணைத் தலைவர் இந்திக ரணவீர,தெரிவிக்கையில் “NDB-யில் பணியாற்றும் நாம் நமது நாட்டின் பலம் நமது விவசாய சமூகங்களின் விருத்தியில் உள்ளது என்பதை புரிந்து கொண்டுள்ளோம். கப்ருக அயோஜன கடன் திட்டம் நிலையான விவசாய வளர்ச்சியை செயல்படுத்துவதற்கும், உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்கும், இலங்கையின் பொருளாதாரத்திற்கு அர்த்தமுள்ள பங்களிப்பை வழங்குவதற்குமான எமது உறுதியை பிரதிபலிக்கிறது. அணுகக்கூடிய மற்றும் நியாயமான நிதியுதவி மூலம், எமது தெங்கு விவசாயிகளின் உண்மையான திறனை வெளிப்படுத்துவதற்கு நாம் உறுதி பூண்டுள்ளோம்” என்றார்.
NDB வங்கியானது இலங்கை விவசாயிகளுக்கு பொறுப்பான நிதியியல் பங்காளி என்ற வகையில் , கடன் விண்ணப்பம் முதல் பணம் வழங்கல் வரை ஒவ்வொரு படிநிலையும் வெளிப்படைத்தன்மை, தொழில்முறை மற்றும் கவனத்துடன் கையாளப்படுவதை உறுதி செய்கிறது. பரந்த அளவிலான கிளை வலையமைப்பு மற்றும் அர்ப்பணிப்புள்ள அதிகாரிகள் குழுவுடன், ஒவ்வொரு ஆர்வமுள்ள தெங்கு விவசாயியையும் வெற்றியை நோக்கி வழிநடத்தவும் ஆதரிக்கவும் வங்கி தயாராக உள்ளது.
கப்ருக அயோஜன கடன் திட்டத்திற்கு விண்ணப்பிப்பதற்கு ஆர்வமாகவுள்ள விவசாயிகள், இது தொடர்பாக மேலும் அறிந்து கொள்ளவும், விவசாய சிறப்பை நோக்கிய பயணத்தைத் தொடங்கவும் அருகிலுள்ள NDB வங்கிக் கிளைக்கு செல்லுமாறு கோரப்படுகிறார்கள்.

