Jun 11, 2025 - 11:26 AM -
0
இலங்கையின் முன்னணி கேமரா விற்பனை நிறுவனமான CameraLK சோனி நிறுவனத்துடன் இணைந்து, புகழ்பெற்ற இலங்கை வனவிலங்கு புகைப்படக் கலைஞரான லக்ஷித கருணாரத்னவை, வனவிலங்கு புகைப்படக் கலைக்கான சோனி பிராந்திய தூதராக நியமித்துள்ளது. இந்த அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம், மதிப்புமிக்க இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இலங்கையர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.
சோனி, CameraLK நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கையின் படைப்பாற்றல்மிக்க நபர்கள் முன்னிலையில் சம்பிரதாயபூர்வமாக இதற்கான கையெழுத்திடும் நிகழ்வு நடைபெற்றது. லக்ஷிதவின் நியமனம் சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, இந்தோனேசியா, வியட்நாம், பிலிப்பைன்ஸ், மங்கோலியா, நேபாளம், மியான்மர், பங்களாதேஷ், இலங்கை, கம்போடியா மற்றும் அதற்கு அப்பாலும் தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியா பிராந்தியத்தை உள்ளடக்கியது. அவரது படைப்புகள் இந்த பிராந்தியம் முழுவதும் சோனியின் தளங்களில் இடம்பெற்று வெளியிடப்படும். இந்த மைல்கல் நியமனம், லக்ஷிதவின் அபாரம்மிக்க திறமை, வனவிலங்குகள் தொடர்பான கதை சொல்லலில் அவரது ஆழ்ந்த அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையில் இயற்கை மற்றும் வனவிலங்குகள் புகைப்படக் கலையின் வளர்ச்சிக்கான அவரது குறிப்பிடத்தக்க பங்களிப்பை அங்கீகரிக்கிறது. அரிய மற்றும் அழகான தருணங்களை வனப்பகுதிகளில் படம்பிடித்த பல வருட அனுபவத்துடன், அவரது புகைப்படங்கள் உள்ளுர் மற்றும் உலகளாவிய பார்வையாளர்களை வசீகரித்துள்ளது.
புதிய தூதரை வரவேற்று பேசிய சோனியின் தென்கிழக்கு ஆசியாவைச் சேர்ந்த Bae, Jihoon, துணை இயக்குநர், பிராந்திய சந்தைப்படுத்தல் மேம்பாட்டு மையம் (RMDC), சோனி எலக்ட்ரானிக்ஸ் (சிங்கப்பூர்) பிரைவேட் லிமிடெட்.. கருத்து தெரிவிக்கையில், எங்கள் பிராந்திய தூதராக லக்ஷித நியமிக்கப்பட்டிருப்பது, பிராந்தியம் முழுவதிலுமிருந்து திறமையான படைப்பாளர்களை ஆதரிப்பதற்கும் முன்னிலைப்படுத்துவதற்குமான எங்கள் உறுதிப்பாட்டின் பிரதிபலிப்பாகும். வனவிலங்கு புகைப்படம் எடுப்பதில் அவரது தனித்துவமான பார்வை மற்றும் அர்ப்பணிப்பு அவரை சோனி வர்த்தக நாமத்திற்கான சிறந்த பிரதிநிதியாக ஆக்குகிறது. என்று குறிப்பிட்டார்.
சோனியின் வனவிலங்கு புகைப்படக் கலைக்கான அதிகாரபூர்வ பிராந்திய தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் லக்ஷித, பிராந்திய பிரச்சாரங்கள் மற்றும் கல்வி முயற்சிகளில் சோனியைப் பிரதிநிதித்துவப்படுத்துவார். அவரது நியமனம், உலகளாவிய படைப்பாற்றல் உரையாடல்களில், குறிப்பாக பாதுகாப்பு மற்றும் காட்சி கதைசொல்லல் துறையில், இலங்கை தெரிவுநிலையைப் பெறுவதற்கான புதிய வாய்ப்புகளையும் திறக்கிறது.
இந்த நியமனம் குறித்து CameraLK நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் அனுஷ்க குணசிங்க கருத்துத் தெரிவிக்கையில், 'இலங்கையின் ஒரு படைப்பாளி சோனி போன்ற உலகளாவிய நிறுவனத்தால் அங்கீகரிக்கப்படுவதைக் காண்பதில் நாங்கள் பெருமைப்படுகிறோம். CameraLK, உலகளாவிய அரங்கில் சிறந்து விளங்க சிறந்த கருவிகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதன் மூலம் எங்கள் உள்ளுர் படைப்பாளர்களை மேம்படுத்த நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். லக்ஷிதவின் பயணம் பலருக்கு ஒரு உத்வேகமாக இருந்து வருகிறது, மேலும் இந்த கூட்டாண்மை அவருக்கு மட்டுமல்ல, இலங்கையில் உள்ள முழு புகைப்பட சமூகத்திற்கும் ஒரு பெரிய வெற்றியாகும் என்று கூறினார்.
இந்நியமனம் தொடர்பில் லக்ஷித கருணாரத்னவும் தனது எண்ணங்களைப் பகிர்ந்து கொண்டார், சோனியின் பிராந்திய தூதராக நியமிக்கப்பட்டது எனக்கு கௌரவமளிக்கிறது. இந்த அங்கீகாரம் ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, சர்வதேச அரங்கில் இலங்கையின் வனவிலங்கு மற்றும் புகைப்பட கலாசாரத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகும். காடுகளிலிருந்து வரும் கதைகளைப் பகிர்ந்து கொள்வதிலும், எனது பார்வையின் மூலம் இயற்கையுடன் ஆழமான தொடர்பைத் தொடர்ந்து ஊக்குவிப்பதிலும் நான் மகிழ்ச்சியடைகிறேன். என்று கூறினார்.
சோனியின் பிராந்திய தூதர் திட்டம், படைப்பாற்றல்மிக்க நிபுணர்களை மேம்படுத்துவதற்கும் அவர்களின் கதைகள், திறன்கள் மற்றும் முன்னோக்குகளை முன்னிலைப்படுத்துவதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இலங்கையிலும் அதற்கு அப்பாலும் வனவிலங்கு புகைப்படக் கலையின் வளர்ந்து வரும் தளத்தில் லக்ஷிதவின் சேர்க்கை ஒரு முக்கிய தருணத்தைக் குறிக்கிறது.

